வியாழன், 16 ஏப்ரல், 2020

முள்ளிவாய்க்கால் வெள்ளைகொடியும் கம்யுனிஸ்டு பாண்டியன் மகேந்திரன்களும் .. ஒரு மீளாய்வு

முள்ளிவாய்க்கால் போர் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்த நேரம்
புலிகளின் நடேசனோடு இதே மகேந்திரன் தொடர்பில் இருந்தவர் ..
ஈழத்தில் நடந்து கொண்டிருந்த படுமோசமான குண்டு மழையை எண்ணி தூங்க முடியாமல் கவலை பட்டுக்கொண்டிருந்த கலைஞர் யாருக்கும் சொல்லாமல் திடீரென்று மெரீனா கடற்கரையில் போய் அமர்ந்துவிட்டார் .. செய்தி அறிந்த எல்லோரும் துடித்து கொண்டு மெரீனா நோக்கி ஓடினார்கள் ..
சோனியா காந்தி அம்மையார் இது பற்றி சிதம்பரம் பிரணாப் முகர்ஜி போன்றவர்களோடு விவாதித்து ஒரு முடிவுக்கு வந்து சிதம்பரத்தை இந்த விடயத்தில் தூண்டினார்
சிதம்பரம் ஒரு ஒப்பந்தத்தை தன் கைப்படவே  எழுதி அதை தொடர்பில் இருந்த புலிகளிடம் தெரிவித்தார் .
அதில் சுமார் பன்னிரண்டு ஆயிரம் புலிகளுக்கு புனர் வாழ்வு அளித்து விடுவிப்பது எனவும் . கிரிமினல குற்றங்க்ள உடையோரையும் ஓரளவு நீக்கு போக்கான அணுகுமுறையில் விசாரணை நடத்தி சட்டத்திற்கு உட் பட்ட விதத்தில் விடுவிப்பது என்றும்.
இதர முக்கிய புலி தலைவர்களை பாதுகாப்பாக இலங்கையை விட்டு அவர்கள் விரும்பும் நாட்டுக்கு போவதற்கு உரிய  வழியை விடுவது என்றும் எழுதப்பட்டு இருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மிகவும் இரகசியமாக கையாளுமாறு சிதம்பரம் புலிகளை கேட்டு கொண்டார்.
அதனிடையியே பிரணாப் முகர்ஜி இலங்கை அரசோடு பேசி கனரக குண்டுகளை பொழிவதை நிறுத்த செய்தார் . அந்த செய்தியும் வாக்குறுதியும் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து கிடைத்த பின்பு  கலைஞர்  உண்ணாவிரத்தை முடித்தார்.


இதுவரை எல்லாம் ஓரளவு சரியாக போய்கொண்டுதான் இருந்தது.

போராட்டம் தோற்று விட்டது . ஆனால் போராளிகளும் மக்களும் பாதிப்பில் இருந்து தப்புவதற்கு ஒரு இறுதி நேர வாய்ப்பாக இந்த சிதம்பரம் முயற்சி அமைந்தது என்றுதான் எல்லோரும் கருதி கொண்டுருந்தனர் .

அப்போது இந்திய நாடாளுமன்ற தேர்தல் உச்ச கட்டத்தில் இருந்த நேரம்.
காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வராது .
பாஜகவே பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் என்று தமிழகத்தில் ஜெயலலிதா வைகோ கம்யுனிஸ்டுகட்சிகள்  போன்றவை முற்று முழுதாக நம்பி கொண்டிருந்தார்கள் .
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பட்டி தொட்டி எல்லாம் வைகோ நெடுமாறன் சீமான் மற்றும் அதிமுகவினர் உரத்து குரல் எழுப்பி கொண்டிருந்தனர்.
அங்கு முள்ளிவாய்க்காலிலோ தலைக்கு மேல் வெள்ளம் போய்கொண்டு இருந்தது . ஒரு நிமிடம் கூட தாமதிக்க முடியாத அளவு நிலைமை கொடுரமாக இருந்தது.
அப்போது புலிகள் தொலை பேசியில் பேச முயன்ற போது வைகோ தேர்தல் பிரசாரத்தில் மும்மரமாக இருப்பதால் நேரமில்லை என்று தட்டி கழித்ததாக செய்திகள் உண்டு.
அப்போது பிரபாகரன் மிகவும் இரகசிய இடத்தில இருந்தார் . இயக்கத்தின் முக்கிய தலைவர்களுக்கும் கூட அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது
சிதம்பரத்தின் திட்டம் பற்றி அவருக்கு கூறப்படும் முன்னமே சிதம்பரத்தின் இரகசிய ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் நடேசன் மூலமாக தமிழக கம்யுனிஸ்டு தலைவர் மகேந்திரனுக்கு லீக் ஆகி விட்டது.

இங்கேதான் அவர்களின் நரிக்குணம் வெளிப்பட்டது .
இந்த திட்டம் நிறைவேறினால் ஒருபோதும் புலிகளோ உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்களோ வைகோ நெடுமாறன போன்றவர்களை மதிக்க மாட்டார்கள் அது மட்டுமல்ல இந்த கோஷ்டியின் வண்டவாளங்களை அம்பல படுத்தவும் கூடும் என்ற நோக்கத்தில் இவர்கள் செயல் பட்டார்கள்.

பாஜகவே ஆட்சிக்கு வரும் வந்த உடனேயே இந்திய இராணுவம் உதவிக்கு வரும்  போரை நிறுத்துவோம் என்று  புலிகளை நம்பவைத்தனர்.

காங்கிரசும் திமுகவும் இந்த தேர்தலில் தோற்க போகிறார்கள் அதனால்தான் அவரகள் இந்த ஒப்பந்த ஸ்டன்ட்டை  அடிக்கிறார்கள்  என்று தங்கள் தரப்பு வாதங்களை எல்லாம் புலிகளுக்கு கூறினார்கள்.
இறுதியாக இவற்றை எல்லாம் பிரபாகரனுக்கு தெரியப்படுத்தி அவரின் இறுதி முடிவு கேட்கப்பட்டது
அதற்கு அவர் இந்த திட்டத்திற்கு அதுமதி    "இல்லை "  என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் .
அவர் என்னத்தை விளங்கி என்னத்தை சிந்தித்து   என்னத்தை சொன்னாரோ?

அந்த தேர்தலில் பாஜக அதிமுக  மதிமுக  கம்யுனிஸ்டு  கூட்டணியின்  பெருவெற்றியை எதிர்பார்த்து  காத்திருந்த தமிழக தலைவர்களுக்கு என்ன கிடைத்தது என்பது நாடறிந்தது.
 இவர்களை நம்பி  " இல்லை"  என்ற ஒற்றை சொல்லில் சிதம்பரதிதின் திட்டத்தை தூக்கி எறிந்தவர்  என்ன எண்ணியிருப்பார் எனபது எவருக்கும் தெரியாது.

இதற்கு பின்பும் தமிழக புலி ஆதரவு அரசியல்வாதிகளின் நச்சு கரங்கள் எப்படி புலிகளை ஆட்டி படைத்தது என்பதையும் கொஞ்சம் கவனிப்போம் .
இறுதியாக ஐ நாவின் விஜய நம்பியார் முன்னிலையில் வெள்ளை கொடியோடு இராணுவத்தை நோக்கி சரண்டர் செய்ய முன்பாக தாங்கள் சரண்டர் செய்வதாக புலிகள் உலகுக்கு அறிவிக்க வேண்டிய நேரம் வந்தது.

 அதை .. அதாவது தாங்கள் சரண்டர் செய்வதாக உலகுக்கு புலிகள் தெரிவித்து சரண்டர் செய்தல் அப்படி வருபவர்களை கொல்வது என்பது இலங்கை அரசுக்கு முடியாத காரியமாக இருக்கும் .
அப்படி அவர்களை இராணுவம் கொன்றால் , நிச்சயமாக பார தூரமான போர்க்குற்ற விசாரணையை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் .

இதுபற்றி புலிகளின்  நடேசன் தமிழக கம்யுனிஸ்டு தலைவர் அய்யா பாண்டியனிடம் கூறினார் . அதற்கு பாண்டியின் கூறியது
சரண்டர் என்று சொல்லாதீர்கள் .. ஆயுதங்களை மௌனிக்கிரோம் என்று அறிவியுங்கள் என்றார்.
அதற்கு புலிகளின்  நடேசன் அப்படியாயின் அதை நீங்களே எழுதி அனுப்புங்கள் அதை நாங்கள்  வெளியிடுகிறோம் என்றார்.
திரு பாண்டியனும் அதை எழுதி அனுப்பினார் . அதை பெற்றுக்கொண்ட நடேசன் அதை அப்படியே தங்களின் அறிக்கையாக உலகுக்கு அறிவித்து விட்டு வெள்ளைகொடியோடு  ராணுவத்திடம் சென்றார்கள் .
சரண்டர் என்று அறிவிக்காமலேயே சரண்டர் செய்தாரகள்.
சரண்டர் ஆனவர்களை கொல்வது மிக  மிக பெரிய குற்றம் .
இவர்கள்தான் எந்த இடத்திலும் சரண்டர் என்று அறிவிக்கவில்லையே ?
மகேந்திரனும் பாண்டியனும் தந்த பரிசு

கருத்துகள் இல்லை: