திங்கள், 13 ஏப்ரல், 2020

சடலங்களை புதைக்க இடமில்லாத நிலையில் கல்லறைகளாக மாறும் பூங்காக்கள் ?: அமெரிக்காவில் அவலம்

வீரகேசரி : ஒட்டு மொத்த உலகையே அச்சத்தில் உறையச் செய்துள்ளது உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகின்ற நிலையில், நியூயோர்க்கில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது பூங்காக்களை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் இதுவரை 551,081 பேர் பாதிக்கப்பட்டும், 22,105 பேர் உயிர்ழந்து  உள்ளனர்.
இதிலும், உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயோர்க் உருவெடுத்து உள்ளது இந்நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் கொரோனாவினால் பலர் பலியாகி வருவதால் அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு தினமும் சராசரியாக 800 பேர் வீதமானோர் இறந்துள்ளார்கள .
அங்குள்ள பெரிய கல்லறைகள் எல்லாம் இப்போதே சடலங்களை புதைக்க இடம் இன்றி காணப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்தோடு, ஏற்கனவே 2 ஆயிரம் பேருக்கும் அதிகமான உடலை வைத்தியசாலையில் ஐஸ் பெட்டிகளுக்கு வைத்து உள்ளனர். வெளியே புதைக்க இடம் இல்லாத காரணத்தால் இந்த உடல்களை புதைக்காமல் வைத்து இருக்கிறார்கள். நியூயோர்க்கில் சடலங்களை புதைக்க இடம் இல்லாத காரணத்தால் அங்கு அருகே இருக்கும் மாகாணங்களில் உடல்களை புதைக்க திட்டமிட்டு வருகிறார்கள். மேலும், நியூயோர்கிலுள்ள பெரிய மற்றும் சிறிய கல்லறைகள் அனைத்திற்கும் தினமும் 80-90 சடலங்கள் வருவதாக அங்கு பணியாற்றும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: