வீரகேசரி : கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா வைரசினால் 3.3 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள் என ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1.2 பில்லியன் மக்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
தீவிர சமூகவிலக்கல் காணப்பட்டால் கூட 122 மில்லியன் பேர் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என ஐநா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
வறுமை, நகரங்களில் மக்கள் நெருக்கமாக வாழுதல்,பரந்துபட்ட சுகாதார நெருக்கடி காரணமாக ஆபிரிக்கா வைரஸ் காரணமாக அதிகளவு பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது என ஐநா தெரிவித்துள்ளது.
ஆபிரிக்க கண்டத்தில் இதுவரை 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக