வெள்ளி, 17 ஏப்ரல், 2020

ஊடகங்களின் சமுக பொறுப்பு

Devi Somasundaram : சமூக பொறுப்பு .
சோஷியல் கமிட்மெண்ட் என்பது ஒவ்வொரு தனி நபருக்கும் தேவை ..நாம பேசும் செய்தி உண்மையாய் இருந்தாலும் அதன் பொருட்டு தீமை விளையும் என்றால் அதை பேசக் கூடாது ( சமீபத்தில் அப்படி ஒரு பதிவ நானே போட்டு நீக்கி இருக்கேன் ..காரணம் அது உண்மையாய் இருந்தாலும் சமூகத்தை மிஸ்லீட் செய்யக் கூடாது என்பதற்காக .) .
அம்பத்த்தூர்ல ஒரு இறந்த மருத்துவரை மயானத்தில் அனுமதிக்க மறுத்தது உண்மை சம்பவம் என்றாலும் அடுத்தடுத்து எல்லா இறப்பையும் அதோட ரிலேட் செய்து பேசுகிறார்கள் .
கோவை டாக்டர் கொரானாவால் இறக்கவில்லை, அவர் டெங்குவால் தான் இறந்தார் .அவர் இளம் வயதில் இறந்த சோகம் தாங்காமல் ஒரே மகனை பலி தந்த வருத்ததில் அவர் தாயார் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையுல் இருக்க்கின்றார் .
அந்த மருத்துவரை அடக்கம் செய்ய எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை ..இணையத்துல் சிலர் அப்படி தெரிவிக்கப்பட்டாதாக எழுதினர் .
உண்மையாகவே இருந்தாலும் அதை பேசாமல் இருக்கலாம்.
கொரானா பாதிப்பை சரி செய்ய மருத்துவர்கள் தஙகள் உயிரை, குடும்பத்தை பணயம் வைத்து செயல்படுகின்றனர் .அதில் சில மருத்துவர் பாதிக்கப்படுவதும் நிஜம் ...

அப்படி பாதிக்கப்பட்டவர் இப்படி பட்ட தகவலை கேள்விபட்டால் மேலும் மனமுடையக் கூடும்...அது பொய்யா, உண்மையா என்று யோசிக்க அவர்கள் மன நிலமை இடம் தராது ..ஏற்கனவே மன அழுத்ததில் வேலை பளுவில் உள்ளவர்களுக்கு இது போன்ற செய்தி மேலும் அழுத்தம் தரும்.
அப்படி ஒரு சமூக பாதிப்பை உண்டாக்காமல் பொறுப்புடன் எழுதுங்க ..கேள்விபடும் தகவல் உண்மையா என்று ஆய்ந்து எழுதுங்க ..சில உண்மைகளை எழுதாமல் கூட இருக்கலாம்...அதனால் பொது நன்மை கிடைக்கும் என்றால் ..
இன்னொரு புறம் மதக்கலவரம் என்பது போல் சிலர் எழுது கின்றனர் ..அதை தமிழகத்தின் அடையாளமாக காட்ட முனைகிறார்கள் ..ஒரு பெரும் கூட்டம் இந்த அரசியல் அறியாமல் அது பாட்ட வாழ்ந்து கொண்டு இருக்கு .

உதாரணமாக ..காரைக்கால்ல கீழ காசாகுடில உள்ள ஒரு இஸ்லாமியர் மளிகை கடை ஓனருக்கு அவர் டெல்லி போனதாகவும் அவருக்கு தொற்று உள்ளது என்றும்..அவர் அம்மாவே பேசுவது போல் ஒரு வாட்ஸ் அப் வீடியோ பரவியது ..
அடுத்த நாள் அவர் கடை திறந்து தனக்கு கொரானா டெஸ்ட் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் டெல்லிக்கே போக வில்லை என்பதையும் நிருபிக்க மக்கள் வழக்கம் போல் அவர் கடையில் பொருள்களை வாங்கி செல்ல ஆரம்பித்தனர் .
பொருள் வாங்குவதில் அதிகம் பேர் இந்துகள் தான்..அதில் பாப்பனர்களும் உண்டு , வினாயகா மிஷனில் படிக்கும் வட நாட்டு மாணவர்களும் வதந்திகளை பொருட் படுத்தாமல் வாஙகி செல்கின்றனர் .
.வதந்தியால் அந்த கடைக்காரர் பர்ஸ்னலா பாதிக்கப்பட்டாலும் பொது சமூகத்தில் பெரும் பான்மை அதை ஒதுக்கி விட்டு போய் கொண்டே இருக்கின்றனர் ..
பொத்தாம் பொதுவா தமிழ் நாட்டில் மதக்கலவரம் என்பது போன்ற செய்திகள் மதகலவரத்தை தூண்டி விட துடிக்கும் சங்கி கூட்டத்துக்கே உதவி செய்தது போல் ஆகும் .
காசுக்கு அடியாள் வேலை பாக்க நிற்கும் சில அடிமைகள் கொட்டத்தை அடக்க வேண்டிய அதிமுக அரசை கண்டிக்கனுமே தவிர பொது படையா எழுதாதிங்க ...
யாரை கேள்வி கேட்க்கனும் என்பதில் தெளிவில்லாதவர்கள் அரசியல் பேசுவது ஆபத்தானது.
கேள்வி கேட்கப் பட வேண்டியது அடிமை அரசும், ஆர் எஸ் எஸ் கும்பலும்.தான்
#தேவி.

கருத்துகள் இல்லை: