Jeevan Prasad :
கொரோனா வைரஸ் குறித்து 2008 இல் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அறிந்திருந்தன!
பேராசிரியர் சன்ன ஜெயசுமன தனது நினைவுக் குறிப்பில், அமெரிக்க தேசிய புலனாய்வு கவுன்சில் 2008 ல் அதாவது 12 வருடங்களுக்கு முன் 2020-2025 காலப் பகுதியை உலகளாவிய தொற்றுநோயாகக் கணித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த புலனாய்வு தகவலில் கீழ்வருமாறு உள்ளன.

- இந்த தொற்று உலகளாவிய தொற்று நோயாக சுவாச மண்டலத்தினூடாக எளிதில் பரவும்.
- H5N1 போன்ற ஒரு வைரஸ் மரபணு மாற்றப்பட்டு, கொரோனா வைரஸ் அல்லது பிற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் போன்ற வைரஸால் ஏற்படலாம்.
- இத்தகைய தொற்று மக்களும் விலங்குகளும் அதிகமாக வாழும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா அல்லது தென்கிழக்கு ஆசியாவில் தோன்றக்கூடும்.
- மருத்துவத் துறையில் ஏற்படும் தாமதம் மற்றும் சரியான நோயறிதல் இல்லாமல் அதை புரிந்து கொள்ள வாரங்கள் ஆக நீண்டு போகலாம், இது உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்த போதுமானது.
- அமெரிக்காவில் மிலியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்த வைரஸால் இறக்கலாம்.
உலகளாவிய போக்குகள் 2025 அறிக்கையை தயாரிப்பதில் மத்தேயு பாரோச் தலைமை தாங்கினார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஐரோப்பிய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். பாரோச் கணிப்புகள் ஊடாக அமெரிக்க உளவுத்துறை சமூகத்தில் புத்திசாலித்தனமான மற்றும் சிறந்த தந்திரோபாய நிபுணர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
உலகளாவிய தொற்றுநோய்க்கான ஆபத்து பற்றிய கணிப்பை அமெரிக்கா புறக்கணித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டாம்ப் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், மைக்கேல் ஓஸ்டர்ஹோம் மற்றும் மார்க் ஓல்ஷேக்கர் எழுதிய 2017 ஆம் ஆண்டின் “Deadliest Enemy: Our War Against Killer Germs” (Originally published: March 14, 2017) எனப்படும் டெட்லீஸ்ட் எதிரி: கில்லர் கிருமிகளுக்கு எதிரான எங்கள் போர், புத்தகத்திலும் அமெரிக்க தொற்று நோயியல் நிபுணர்கள் அத்தகைய உலகளாவிய தொற்றுநோய்களின் அபாயங்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.
- ஜீவன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக