மின்னம்பலம் : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
அமைவதற்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர்
மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
#HarwardTamilChairக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில், மேலும் தேவைப்படும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் எனத் தனது ட்விட்டர் பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பழமை வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்துவருகிறது. மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் ஆகியோர் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவந்தனர்.
தமிழ் இருக்கை அமைக்க அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 42 கோடி செலுத்தவேண்டிய நிலையில், ரூ. 10 கோடியை வழங்குவதாகத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முன்பாக ரூ. 20 கோடி வரை திரட்டப்பட்ட நிலையில், மீதம் தேவைப்படும் தொகையைத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் திரட்டவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ் இருக்கை அமைவதற்கு நடிகர் விஷால், கருணாஸ் ஆகியோரும் நிதி உதவி அளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக