செவ்வாய், 31 அக்டோபர், 2017

விடுதலை சிறுத்தைகள் துண்டறிக்கை ; மதவெறி மாய்ப்போம் - மண்ணில் மனித நேயம் காப்போம்! வாரீர்! வாரீர்!

athithakarikalan.vck: இந்திய ஒன்றியத்திற்குட்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கென ஒரு சில சிறப்பு தகுதிகள் உண்டு. சமூக நீதிக்கு முன்னோடியான மாநிலம், வகுப்பு வாதமும் மத வாதமும் இங்கே எடுபடாது என்பது தான் அது. அதற்கு அடிகோலியவர்கள் பன்டிதர் அயோத்தி தாசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, காமராஜர் போன்றவர்கள் ஆவர்.
சமூக நீதிக்கு எதிரான குரலோ அல்லது மதவெறி, இனவெறி, மொழிவெறி பாசிசமோ இங்கே தென்பட்டால் அதனை தமிழர்கள் தங்கள் இடது காலால் இடறித் தள்ளி சென்று விடுவது தான் வாடிக்கை. ஆனால் அது தான் இப்போது மதவெறி கும்பலுக்கும் சங் பரிவார தலைவர்களுக்கும் மிகப்பெரிய சவாலாகவும் அச்சமாகவும் உள்ளது. மதப் பெரும்பான்மை வாதத்தை முன்னிறுத்தி மற்ற மாநிலங்களில் தாங்கள் காலூன்ற முடிகிற நிலையில் இங்கே தொடர் தோல்விகளை மட்டும் சந்திப்பதும், மதக் கலவரங்களை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றிவிடும் உத்திகளும் இங்கே தமிழகத்தில் எடுபடவில்லையே என்ற தோல்வி மனப்பான்மையே இவர்களை நேர்மறையாக சிந்திக்கவும் செயல்படவும் விடுவதில்லை.

கொள்ளைப்புறமாக நுழைந்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி விட துடிப்பதும், நடுவன் அரசின் அதிகாரம் பெற்ற அமைப்புகளை எதேச்சதிகாரமாக ஏவிவிட்டு ஆட்சியாளர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும், கலை துறை பிரபலங்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் சனநாயகத்திற்கு புறம்பாக மிரட்டி அடிபணிய செய்கின்றனர். பணிய மறுப்போரை கொலை செய்யவும் தயங்குவதில்லை.
ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஓரே கல்வி, ஒரே கலாசாரம் என அரசியல் சாசனத்திற்கு எதிரான பொய் பிரச்சாரங்களை தங்களது ஆதரவு கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் கட்டவிழ்த்து விட்டு அப்பாவி பாமர மக்களை அடிப்படை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். காலஞ்சென்ற நமது அரசியல் தலைவர்களை, சமூக நீதி காத்த உத்தமர்களை கேவலமாக பேசியும் ஏசியும் வருகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்துக்களை மேடை போட்டு பேசி தேச துரோக செயல்களிலும் தயக்கமின்றி ஈடுபடுகின்றனர். சிறுபான்மை மதத்தோரின் நம்பிக்கைகளை சீர்குலைக்கும் வேலைகளில் தங்கள் மதத்தின் பன்டிகை நாட்களில் அப்பாவி மக்களை ஈடுபட செய்கின்றனர்.
இவர்களின் நோக்கம் வன்முறை தான். பெரும்பான்மை மத வாதத்தின் மூலம் வெறுப்பு பிரச்சாரத்தையும், பொய் மற்றும் அவதூறுகளை தொடர்ந்து முன்னெடுப்பதும் அதன் மூலம் வன்முறைளை உருவாக்கி தங்களின் மதவெறி அமைப்புகளை வலுப்படுத்துதல் தான் இவர்களின் தலையாய கோட்பாடு. முதுகுளத்தூர் கலவரம் தொடங்கி ஆம்பூர் கலவரம் வரை இதனை இவர்கள் முயற்சித்து தோற்ற கதை அனைவரும் அறிந்ததே.
எப்படியாவது இந்து - முஸ்லீம் கலவரம் ஏற்பட வேண்டும். இந்துக்களுக்குள்ளே ஆதிக்க - அடிமை சாதி சன்டைகள் ஏற்பட வேண்டும். முற்போக்காளர்களுக்கும் - பழமை, அடிப்படை வாதிகளுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட வேண்டும். சாதி மத நல்லிணக்கம் பாழ் படவேண்டும். இவர்களின் பிற்போக்கு பெரும்பான்மை வாதம் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் சங் பரிவாரங்களுடன் தாங்கள் ஒரு அரசியல் கட்சியாக இங்கே காலூன்றி விட வேண்டும் என்பது தான் இவர்களின் நோக்கம்.
அதனாலேயே இந்த மதவெறி கும்பலின் தலைவர்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேணியுமாக இங்கே இருக்கும் அனைத்து அமைப்புகள் மீதும் பழிபோடும் பாதக செயல்களையும், அனைத்து தலைவர்கள் மீதும் வயது வித்தியாசமின்றி அருவருப்பான வார்த்தை பிரயோகங்கள் மூலம் கொச்சைப் படுத்தியும் இழிவு படுத்தியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நிறம் மாறும் பச்சோந்தித்தனமும், கோயபல்ஸ் கோமாளித்தனமும், ஹிட்லரை விஞ்சும் எதேச்சதிகார போக்கும் கலந்த கவலைகள் தான் இந்த மதவெறி கும்பலின் தலைவர்கள் என்பதை தமிழ் நாட்டு மக்களுக்கு அவ்வப்போது தோலுரித்து காட்டும் துணிச்சலான பணியை விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் மிகச்சிறப்பாக செய்து காட்டி வருகிறார். அதனை பொருத்துக் கொள்ளாத இந்த மதவெறி கூட்டம் ஒரு தன்னலமற்ற, தன்னிகிரில்லாத, தனித்துவம் வாய்ந்த தலைவரை எப்படி அடிபணிய வைப்பது என கங்கனம் கட்டி அலைகிறார்கள். தங்கள் கொள்கை எதிரியை எதிர்க்க இவர்கள் தங்களின் பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் பிரயோகம் செய்து தோற்று நிற்கின்றனர்.
எனினும் இந்த நயவஞ்சகர்களை சனநாயக வட்டத்திற்குள் நின்றே எதிர்ப்பது என்றும், இவர்களின் முகத்திரையை பொதுமக்கள் முன்னிலையிலையே கிழித்து காட்டுவதென்றும் அதுவே சிறுத்தைகளுக்கு தான் கற்றுக் கொடுத்த அறச்சீற்றம் என்கிற வகையில் தலைவர் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்கள் எதிர் வரும் நவம்பர் 3 ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கன்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். தோழமை கட்சியினரும், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ளோரும், முற்போக்கு சனநாயக சக்திகளும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.
மதவெறி மாய்ப்போம் - மண்ணில்
மனித நேயம் காப்போம்!
வாரீர்! வாரீர்!
இவன்,
ஆதித்த கரிகாலன்
___________________
இந்த துண்டறிக்கையை தேவைப்படுவோர் அவர்கள் பெயரிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்

கருத்துகள் இல்லை: