செவ்வாய், 31 அக்டோபர், 2017

திமுக என்பது ஆரியத்தைத் தவிர அனைத்து சாதி, மத, இன மக்களுக்கும் ....

Sowmian Vaidyanathan : தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் சென்று மரியாதை செய்ததை இங்கு சிலர் விமர்சித்து வருவதைக் கண்டால் பத்திக்கிட்டு தான் வருது...!
திமுக என்பது ஆரியத்தைத் தவிர அனைத்து சாதி, மத, இன மக்களுக்கும் பொதுவான இயக்கம். ஆரியம் தவிர்த்த மற்றையோர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அல்லது ஒரே நூலிழையில் இணைக்கும் பணி தான் திமுகவினுடையது.
அப்படியான ஒரு குடையாகவோ அல்லது இணைப்புக் கயிராகவோ திமுக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் அதற்கு இருக்கின்றது. இல்லையென்றால் ஆரியம் குறுக்குசால் ஓட்டி அனைவரையும் தனித்தனியே பிரித்து வைத்து..., உங்களுக்குள் ஆண்டான், அடிமை என்று பிரிந்து நில்லுங்கள்... ஆனால் நீங்கள் அனைவருமே எமக்கு அடிமைகள் தான் என்பதை பறைசாற்றிக்கொண்டே இருக்கும்..!

இந்த இடத்தில் தான் சமூகநீதி என்பது பட்டுப்போக ஆரம்பிக்கும். அதைத் தடுத்து நிறுத்தி, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல இல்லாமல்... இன்றைக்கு பார்ப்பன சாதியினர் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் இன்னபிற அனைத்திலும் அவர்களுக்கு இணையாக உயர்ந்து நிற்கும் அந்த நிலையும் பட்டுப்போகும்..!
இதைத் தடுத்து நிறுத்தி, ஆரியர் தவிர்த்த மற்ற அனைவரின் உயர்வும் தொய்வில்லாமல் செல்ல, ஆரியம் அல்லாதோர் அனைவரையும் ஒரே அடையாளத்தில்... அதாவது திராவிடர் என்ற அடையாளத்தோடு ஒன்றிணைத்து சமூகநீதியைக் காத்து நிற்பது திமுகவின் கடமைகளில் பிரதானமானது.
அதற்காகத்தான அனைத்து சமுதாய மக்களின் கொண்டாட்டங்களிலும், நல்லது கெட்டதுகளிலும் திமுக பங்கேற்பது என்பது அத்தியாவசியமான கடமையாகிறது.
அந்த வகையில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேவர் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது மட்டுமன்றி, அவசியமானது என்பதும் பொதுவானவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
திமுகவை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்க நினைப்பது, திராவிட இயக்க சிந்தனைகளுக்கு எதிரானது. தளபதி இந்த விஷயத்தில் மிகத் தெளிவாகவே செயல்பட்டு வருகின்றார்..!

கருத்துகள் இல்லை: