சனி, 4 நவம்பர், 2017

திமுக எம்எல்ஏ எச்சரிக்கை! ஓடிவரும் சுகாதாரத்துறை அமைச்சர்..!

நக்கீரன்:திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதியதாக கட்டி திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் ரத்தத்தில் உள்ள சிவப்பு உயிரனுக்ககளை பிரித்து எடுத்து பரிசோதனை செய்யும் கருவி இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ரத்தத்தில் உள்ள சிவப்பு உயிரனுக்ககளை பிரித்து எடுத்து பரிசோதனை செய்யும் கருவி இல்லாததே. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வேலூர், சென்னை என பிற மாவட்ட அரசு மருத்துவமனைக்கு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி அனுப்பிவைத்து வந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் 21ம் தேதி டெங்கு விழிப்புணர்வு மற்றும் மருத்துவர்கள் உடனான ஆய்வுக்காக தி.மலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 48 மணி நேரத்தில் பிளேட்லெஸ் கருவி வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

;">ஆனால் அவர் உத்தரவாதம் அளித்து 11 நாட்கள் கடந்தும் அக்கருவி தி.மலை அரசு மருத்தவக்கல்லூரிக்கு வழங்கப்படவில்லை. இதனால் நோயாளிகளை தொடர்ந்து வெளிமருத்துவமனைக்கு அனுப்பும் நிலையே நீடித்தது.

இதனிடையே பொதுமக்களின் சிரமத்தை ஊடகங்களின் வாயிலாக அறிந்த தி.மலை சட்டமன்ற உறுப்பினர் எ.வா.வேலு செய்தியாளர்களை அழைத்து, இன்னும் 15 தினங்களுக்குள் அக்கருவி வழங்கப்படவில்லையெனில் திமுகவும் பொதுமக்களும் இணைந்து ரூ.23 லட்சம் மதிப்பிலான அந்த இயந்திரத்தை எங்களது சொந்த செலவில் வாங்கி தருவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த தகவல் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சென்றடைந்தது. இதை கேட்டு பதறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைக்கு பொதுமக்களும், எதிர்கட்சியும் சேர்ந்து வாங்கி தந்தால் அரசு செயல்படவில்லை என்பது போல் ஆகிவிடும். அதனால் உடனடியாக அந்த இயந்திரத்தை வாங்கி மருத்துவமனைக்கு வழங்க, தன் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், நவ.2ம் தேதி இந்த இயந்திரம் தி.மலை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு அந்த இயந்திரத்தை தி.மலை மருத்துவமனைக்கு வழங்கும் விழாவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ராஜா

கருத்துகள் இல்லை: