ஸ்பெல்கோ :
சென்னையில் நேற்று காலையில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில்
சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. மாலை 6 மணியளவில்
பெய்யத்துவங்கிய மழையானது அதிகாலைவரை தொடர்ந்து பெய்தது.
இதனால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் சூழ்ந்தது. வடசென்னையின் பல பகுதிகளும் தென்சென்னையின் சில பகுதிகளிலும் மழை நீரில் மூழ்கின. குறிப்பாக வடசென்னையின் வியாசர்பாடி, கொடுங்கையூர், தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூர், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்கால், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மெரினாவில் டிஜிபி அலுவலகம் அருகே 30 செ.மீ. , ஓ.எம்.ஆர் பகுதியில் 20 செ.மீ. மழை, , நுங்கம்பாக்கம் 18 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம் - 20 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் 15 செ.மீ, மீனம்பாக்கம் 14 செ.மீ, புழல் 9 செ.மீ, தரமணி 19 செ.மீ மழை பெய்து உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலையும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. . மாலை 6 மணியில் இருந்து விடிய விடிய மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டும் நார்வே வானிலை மையம் கணித்தது போலவே சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக