திங்கள், 30 அக்டோபர், 2017

ஹார்வர்டு தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் 25000 டாலர்கள் !

ஹார்வர்டு தமிழ் இருக்கை: ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி!
மின்னம்பலம் : ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி செய்துள்ளார்.
சமீபத்தில் கனடாவின் டொரன்டோ நகரில் மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். பவரேட் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரம் இருக்கைகளும் நிரம்பி வழிந்தன.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்த பணத்தில் 25,000 அமெரிக்க டாலருக்கான (ரூ.16 லட்சம்) காசோலையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிஷான் நித்தி, ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஹார்வர்டு தமிழ் இருக்கை ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் ஜானகிராமன், எழுத்தாளர் முத்துலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கக் கடந்த 3 ஆண்டுகளாக ‘ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு’ (Harvard Tamil chair Inc) முயற்சியை முன்னெடுத்துவருகின்றது. திரைத் துறையைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ், விஷால், கருணாஸ் ஆகியோர் நிதியுதவி செய்துள்ள நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானும் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: