வெப்துனியா :மு.க.முத்துவின் பேரனும் கருணாநிதியின் கொள்ளுப் பேரனுமான மனுரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த தம்பதிகளின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், கருணாநிதியின் தலைமையிலேயே இந்த திருமணம் நடைபெற வேண்டும் என குடும்பத்தினர் கருதியதால், எளிய முறையில் கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதில், விக்ரம் மற்றும் மணமகன் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். திமுகவை விட்டு விலகியுள்ள அழகிரியும் இதில் கலந்து கொண்டார்.
ஆனால், திமுக செயல் தலைவரும், மணமகனின் சின்ன தாத்தாவுமான மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளவில்லை.
இன்று தேவர் ஜெயந்தி என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர்வளையத்து மரியாதை செய்வதற்காக ஸ்டாலின் சென்றதால்தன், இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக