செவ்வாய், 31 அக்டோபர், 2017

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது! ஏன் தெரியுமா ? சுரேஷ் காமாட்சி ....

Shankar  Oneindia Tamil  சென்னை: தமிழ் ராக்கர்ஸை உங்களால் பிடிக்கவே முடியாது. அதைவிட்டுவிட்டு திருட்டு விசிடியை ஒழிக்க ஒரிஜினல் சிடி மார்க்கெட்டைத் திறந்துவிடுங்க என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசினார். 6 அத்தியாயம் படத்தின் இசை வெளியீடு நேற்று பிரசாத் லேபில் நடந்தது. இந்தப் படத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவர் இயக்கியுள்ளார். அஜயன் பாலா, கேபிள் சங்கர், சுரேஷ், சங்கர் தியாகராஜன், லோகேஷ், ஸ்ரீதர் என ஆறுபேர். இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தமன், விஷ்ணு, 'பசங்க' கிஷோர், 'குளிர் 100' சஞ்சய், 'நான் மகான் அல்ல' வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
 தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 பத்து டிவிடி இருந்தா படம் இந்த நிகழ்ச்சியில் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி பேசுகையில், "சினிமா வியாபாரத்தைப் பற்றி பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால் அது அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. பர்மா பஜாரில் பத்து டிவிடி வாங்கினால் படம் பண்ணிவிடலாம். படம் பண்ணிவிட்டால் அதன்பின் கருத்து சுதந்திரம் என்று சமாளிக்கலாம்.
 காமராஜர் தோல்வி கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. காமராஜர் தோற்றதற்கு காரணம் சினிமாதானே. மக்களிடம் நேர்மையாக ஒரு விஷயத்தை சொல்வது இல்லை. தவறான விஷயத்தை சொல்லிவிட்டு பின்னர் கருத்து சுதந்திரம் என்று சொல்வது. இது எல்லாம் தவறான ஒன்று. கதாசிரியர்களை மதிப்பதில்லை. காம்பினேஷனுக்கு தான் இங்கே மதிப்பு. இந்த படத்துக்கு எடுத்த முயற்சியை புரமோஷனிலும் எடுத்து சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 
தமிழ் ராக்கர்ஸ் சேரன் கொண்டு வந்த சி2எச் ஏன் தோல்வி அடைந்தது என்று பார்த்திபன்தான் பதில் சொல்லவேண்டும். அவர்தான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர். பைரசியை தடுத்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது. ஒருவேளை யாராவது நடிகர்கள்தான் அதற்கு காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. 

சேரனை ஆதரிக்காதது ஏன்? ஒன்பது மாதங்களாக என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள்? ஸ்ட்ரைக்கை அறிவித்து பின்னர் முடித்தீர்கள். ஜிஎஸ்டிக்கு ஸ்ட்ரைக் அறிவித்தீர்கள். ஆனால் 2 சதவீதம் குறைத்தவுடன் வாபஸ் வாங்கினீர்கள்? தமிழ் சினிமா டிஜிட்டல் என்று தெரிந்துவிட்டது. சேரனை ஆதரிக்காதது தமிழர் என்ற காழ்ப்புணர்ச்சிதான். சேரனை அழைத்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?
 விடுங்க ஒரிஜினல் விசிடி விடுங்க ஆன்லைன் வியாபாரத்தை எல்லா தயாரிப்பாளர்களுக்கு விளக்கி இருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா? எங்கள் தலைவர் க்யூப் கட்டணத்தை குறைக்க இருப்பதாக சொன்னார். ஆனால் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. 32 ஆயிரமாக ஏறிவிட்டது. கேபிள் டிவியில் ஒன்றரை கோடி எப்படி வரும்? ஒரிஜினல் சிடி மார்க்கெட்டை திறந்துவிட்டால் தான் திருட்டு டிவிடி ஒழியும். அரசாங்கம் போலத் தான் இவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள். 
 பார்த்திபன் பேசணும் தியேட்டர்காரர்களிடமிருந்து மூன்று மாதங்கள் கழித்துதான் வசூல் விபரம் வருகிறது. இது உடனே கிடைக்க ஆவண செய்தால் என்ன? இதுபோன்ற என்னுடைய ஆதங்கத்தை பார்த்திபன் அவர்கள் தான் சங்கத்திற்கு எடுத்து செல்ல வெண்டும். தீபாவளிக்கு பத்தாயிரம் கொடுக்கவும் பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுக்கவும் தான் சங்கமா? விஷாலுக்கு எதிராக ஏன் எப்போது பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு விஷால் உள்பட அனைத்து ஹீரோக்களுமே நண்பர்கள்தான்," என்றார்.

www.tamil.filmibeat.com/

கருத்துகள் இல்லை: