சனி, 4 நவம்பர், 2017

மெரினா கடல் நீர் கறுப்பாக மாறி உள்ளது ...... அச்சத்தில் மக்கள்!

chennai's Marina sea shore turns into blacksea because of rain water mixed in it.Gajalakshmi cribe to Oneindia Tamil சென்னை: உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை பகுதியில், கடல் நீர் கறுப்பு நிறமாக மாறியுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் அடை மழை பெய்து வருவதால் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீரோடு சாக்கடைக் கழிவுகள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளும் மழை நீரில் அடித்துச் சென்று கால்வாய் வழியாக கடலில் கலக்கின்றன.
chennai's Marina sea shore turns into blacksea because of rain water mixed in it. மேலும் நேற்று முன் தினம் மெரினா கடற்கரை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணற்பரப்பிலேயே தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நீரில் பலர் தங்களது வாகனங்களை கழுவியதனர், இளைஞர்கள் இந்த நீரில் வீலிங் செய்து விளையாடினர். இதனால் தேங்கிய மழை நீர் மாசானது. இதனிடையே மழை நீர் மணற்பரப்பை வெட்டி கடலுக்குள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டதையடுத்து நீர் வடிந்துள்ளது.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் கலந்த மழை நீரானது மெரினா கடற்கரையில் கலக்கிறது. இதனால் வங்கக்கடல் நீரானது நீல நிறத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. இதனால் மெரினா கடலுக்கு செல்லும் மக்கள் இந்த நீரைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். சுனாமி சமயத்தில் கடல் கறுப்பு நிறத்தில் இருக்கும் என்று புரளி கிளம்ப கருங்கடலாக மாறி இருக்கும் வங்கக்கடலை பலரும் வந்து பார்த்து செல்கின்றனர்.

ஆனால் இது கழிவு நீர் கலந்ததால் ஏற்பட்ட கறுமை நிறம் என்றும். அலைகள் கழிவுகளை கரையில் சேர்ப்பதாலேயே கறுப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நடுக்கடலில் நீர் நீல நிறத்திலேயே இருப்பதாகவும் மாசடைந்த நீர் கலந்ததாலேயே இந்த கறுப்பு நிற தோற்றமளிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஒரு வாரத்தில் வங்கக்கடல் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும் என்றும் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை: