

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் `வேலையில்லா பட்டதாரி 2'. இப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கிப் பாயும் தோட்டா', வெற்றி மாறன் இயக்கத்தில் `வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபக்கிர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பிஸியாக நடந்துவரும் நிலையில், இப்படத்திற்கு உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
ரோமன் ப்யூர் டோலஸ் எழுதிய `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபக்கிர்' என்கிற நாவலைத் தழுவிப் படமாக்கப்பட்டுள்ளது. இந்நாவல் 35 மொழிகளில் வெளிவந்து வரவேற்பைப் பெற்றது. எனவே இப்படத்தினைப் பல நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர். அதன் தொடக்கமாக இப்படத்தின் பெரும்பாலான நாடுகளின் வெளிநாட்டு உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக