tamilthehindu : எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இன்று சென்னையில் காலமானார். சமீப
நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை
மறைந்தார். அவருக்கு வயது 67.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி மிக மிகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை தனது படைப்புகளில் கொண்டுவந்தவர். ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே குடும்பச் சுமையை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர். இதனால் ஆரம்பப் பள்ளியைத் தாண்ட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிக் கல்வியிலிருந்து விடுபட்டாலும் இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அனுபவங்களும் அவரை எழுத்தாளராக்கின.
உயிர்நிலம் உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் என புனைகதை இலக்கியம் சார்ந்து 36 நூல்களை எழுதியுள்ளார்.
அவரது இறுதி அஞ்சலி நாளை காலை சென்னையில் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக