நக்கீரன : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும்.
அதேபோல் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எதிரொலி: சென்னனையில் 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பு..! சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் தேங்கியுள்ள 112 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய கனமழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அடையாறு, கோட்டூர்புரம், மந்தைவெளி உள்ளிட்ட 112 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு்ள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும், மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத்துறையிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக