மின்னம்பலம்: இந்தியாவின்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி ஆசியாவின்
மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதாக
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் தலைவரான ஹூ கா யான் 40.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.1 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததையடுத்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவெடுத்துள்ளார்.
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு மதிப்பு ரூ.6 லட்சம் கோடியைத் தாண்டியதாலேயே முகேஷ் அம்பானி இந்த உயர்வைப் பெற்றிருக்கிறார். மேலும், ரூ.6 லட்சம் கோடி பங்கு மதிப்பைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சிறப்பையும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெற்றுள்ளது. தனது தந்தை திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்ட இக்குழுமத்தை முகேஷ் அம்பானி பல்வேறு பிரிவுகளில் விரிவடையச் செய்து வெற்றியடைந்து வருகிறார். கடந்த ஆண்டில்கூட நெட்வொர்க் சந்தையில் நுழைந்த முகேஷ் அம்பானி, தனது ஜியோ சேவை வாயிலாக நெட்வொர்க் துறையையே ஆட்டம்காண வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக