மின்னம்பலம் : நடிகை
அமலா பால் போலி முகவரியில் கார் வாங்கி ரூ. 20 லட்சம் வரி ஏய்ப்பு செய்த
விவகாரத்தில் விசாரணை நடத்தப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
உத்தரவிட்டுள்ளார்.
புதிய மெர்சிடஸ் - எஸ் வகை காரை சமீபத்தில் ரூ1.12 கோடிக்கு வாங்கியுள்ளார் அமலா பால். இந்த காரை கேரளாவில் பதிவு செய்தால் காரின் மதிப்பிலிருந்து 20% (ரூ.20 லட்சம்) சாலை வரியாகக் கட்ட வேண்டும் . ஆனால், இதே காரைப் புதுச்சேரியில் பதிவுசெய்தல் ரூ.55 ஆயிரம் மட்டும் சாலை வரியாகக் கட்டினால் போதுமானது. இதனால்தான் அமலா பால் தனது காரைப் புதுச்சேரி முகவரியில் பதிவுசெய்துள்ளார். அந்த முகவரி போலியானது என்றும், அங்கு பொறியியல் கல்லுரி மாணவர் தங்கியிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது., அந்த முகவரியில் தங்கியிருந்த மாணவர் தனக்கும் அமலா பாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அமலா பால் வரி ஏய்ப்பு செய்தது குறித்து எர்ணாகுளம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் நிலையில், அவர் போலி முகவரியில் கார் வாங்கியது குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துச் செயலாளருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக