வெள்ளி, 3 நவம்பர், 2017

இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்ற கருத்துக்கு கமல்ஹாசன் மீது உபி போலீசார் வழக்குப்பதிவு

தினத்தந்தி : இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு உத்தரபிரதசத்தில் 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பனராஸ்: நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார்.

இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார். கமல் ஹாசன் கருத்துக்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவுசெய்து உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கமல்ஹாசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்திய தண்டனைச் அட்டப்படி  500, 511, 298, 295(ஏ) & 505(சி) ஆகியபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது

இது போல் வாரனாசி முனிசிபல் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் ஒருவர்  இந்து மதத்தை புண்படும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு செய்து உள்ளார்.வழக்கு நாளை விசாரிக்கபடும் என நீதிபதி அறிவித்து உள்ளார்

கருத்துகள் இல்லை: