Govindarajan Vijaya Padma :
முன்னாள்
நிரந்தர முதல்வர் அம்மா தமிழ் திரை உலகை தான் உயிருடன் இருந்தவரை
புறக்கணித்தார்.மத்திய அரசின் தணிக்கை சான்றிதழ் பெற்றாலும் தமிழக அரசு
சான்றிதழ் பெற வேண்டும் என புதிய முறையை வகுத்து படத்திற்கு இவ்வளவு என்று
லஞ்சம் வாங்கி கொண்டு படங்களை திரையிட அனுமதித்தார்கள்.இதை எதிர்த்து
உதயநிதி ஸ்டாலின் வழக்கு போட்டு வெற்றி பெற்று தனது ஒரு கல் ஒரு கண்ணாடி
திரைப்படத்தை வெளியிட்டார்.
இதில் மானக்கேடு என்னவென்றால் எல் ஆர் ஈஸ்வரி,ராஜஸ்ரீ போன்றவர்கள் எங்கள் திரைப்படத்தை பார்த்து மதிப்பீடு செய்வதுதான்.
இவர்கள் திரைப்படம் பார்க்க வந்தால் அவர்களது உணவு,மற்றும் அவர்களுக்கான பழங்கள் வாங்க நாங்கள் 5000 மொய் எழுத வேண்டும்.இந்த அவலத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கலைவிழாவில் 2014 சைதாப்பேட்டையில் நான் வெளிப்படையாக பேசினேன்.
இது குறித்து ஆதாரங்களுடன் அன்றைய முதல்வராக இருந்த அம்மா அவர்களுக்கு போயஸ் கார்டனில் மனு கொடுத்தேன்.அதன் பிறகு உடனடியாக அப்பொழுது அமைச்சராக இருந்த சி.வி சண்முகத்தை பதவி நீக்கம் செய்தார் முதல்வர். ஆனால் அடுத்து வந்த அமைச்சரும் இதையேதான் செய்தார்.அம்மா ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழக அரசு மாநில விருதுகள் நிறுத்தப் பட்டன. .ஒரு முறை கூட திரையுலக கோரிக்கைகளுக்காக அவர் ஒருவரையும் சந்திக்கவே இல்லை.அதன் பிறகு அம்மாவை அனுப்பி வைத்துவிட்டு தமிழக அரசை கந்தர்வ கோலம் ஆக்கி விட்டார்கள்.இவர்களிடம் இளித்துக் கொண்டு விருது வாங்குவது மானமுள்ள,சுயமரியாதை உள்ள எவரும் செய்ய மாட்டார்கள்.
முதலில் திரைப்படங்களை இரண்டாவதாக பார்த்து தணிக்கை செய்யும் தமிழக அரசின் ஆணையை நீக்க சொல்லுங்கள்.அந்த ஆணைக்கு எதிராக உதயநிதி ஸ்ட்லினும், சவுந்தர்யாவோ ,ஐஸ்வர்யா ரஜினிகாந்தோ கோர்ட் தீர்ப்பு பெற்று உள்ளார்கள்.விருதின் மதிப்பை விட நம் சுயமரியாதை மதிப்பு மிகுந்தது நண்பர்களே.அவர்கள் கொடுத்தாலும் வேண்டாம் என்று திருப்பி கொடுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக