vikatan : குமரகுருபரன்;வெடிக்கும் வேல்முருகன் கழகத்தின்
கதை’ என்று அ.தி.மு.க-வைத் தாக்கிப் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கும் தருணத்தில், ‘ராமதாஸின் சொத்துப்
பட்டியலை வெளியிடுகிறார் வேல்முருகன்’ என்று பரபர தகவல் ஒன்று
பரவிவருகிறது. இதுபற்றித் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைச்
சந்தித்தோம்.
‘ராமதாஸ், ‘கழகத்தின் கதை’ என்று அ.தி.மு.க-வைப் பற்றிப் புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளாரே?’’
‘‘அந்தப் புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ராமதாஸ் எப்படிப்பட்டவர் என்பது பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி புத்தகம் எழுதியுள்ளார். பா.ம.க-வுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தலைவர்கள், ராமதாஸ் பற்றிப் புத்தகம் எழுதத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவை வெளியாகும்போது ‘ராமதாஸ் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் எத்தனை ஆயிரம் பக்கங்கள் வரும்’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். யாரும் யாரைப் பற்றியும் புத்தகம் எழுதலாம். எழுதுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். ராமதாஸ் யோக்கியர் வேடம் போடக் கூடாது.’’
‘‘அ.தி.மு.க-வின் ஊழல் பற்றிப் புத்தகம் எழுதும் டாக்டர் ராமதாஸ், தன்னைப் பற்றி எழுதத் தயாரா? ‘வன்னிய மக்களுக்கு அவர் செய்தது என்ன? எத்தனையோ வன்னிய சொந்தங்கள் உயிரைக் கொடுத்ததால் வளர்ந்தது இந்தக் கட்சி. அந்தக் குடும்பங்களுக்கு என்ன செய்தார்? மக்கள் தொலைக்காட்சி, வன்னியர் அறக்கட்டளை, தமிழ் ஓசை போன்றவற்றுக்காக வசூல் செய்யப்பட்ட கோடிகள் என்ன ஆனது? அது யார் யாருக்குப் பயன்பட்டது? அந்தப் பணத்தைக் கொண்டு யார் யார் வாழ்ந்தார்கள்?’ இதையெல்லாம் பற்றிப் புத்தகம் எழுதுவாரா?
ராமதாஸ் குடும்பம் கோடியில் புரள்வது எப்படி என்பது சி.பி.ஐ-க்குத்தான் வெளிச்சம்!”
‘ராமதாஸ் குடும்பம் குவித்த சொத்துகள் என்று நீங்கள் பட்டியலிட்டுள்ள தகவல்கள் இணையத்தையே கலங்கடிக்கிறதே?’’</>‘‘அதுவா?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் விழுப்புரத்தில் பேசிய ஒரு பேச்சு இப்போது
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘2 ரூபாய்க்கு ஊசி போட்ட ராமதாஸுக்கு
எங்கிருந்து வந்தது பல நூறு கோடி ரூபாய்ச் சொத்துகள்’ என்று வாழப்பாடி
ராமமூர்த்தி ஒரு புத்தகத்தில் எழுதியதைக் குறிப்பிட்டு அந்த மேடையில்
பேசினேன்.‘ராமதாஸ், ‘கழகத்தின் கதை’ என்று அ.தி.மு.க-வைப் பற்றிப் புத்தகம் ஒன்று வெளியிட்டுள்ளாரே?’’
‘‘அந்தப் புத்தகத்தை இன்னும் நான் படிக்கவில்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ராமதாஸ் எப்படிப்பட்டவர் என்பது பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி புத்தகம் எழுதியுள்ளார். பா.ம.க-வுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தலைவர்கள், ராமதாஸ் பற்றிப் புத்தகம் எழுதத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அவை வெளியாகும்போது ‘ராமதாஸ் குடும்பத்தின் சொத்துப் பட்டியல் எத்தனை ஆயிரம் பக்கங்கள் வரும்’ என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். யாரும் யாரைப் பற்றியும் புத்தகம் எழுதலாம். எழுதுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். ராமதாஸ் யோக்கியர் வேடம் போடக் கூடாது.’’
‘‘அ.தி.மு.க-வின் ஊழல் பற்றிப் புத்தகம் எழுதும் டாக்டர் ராமதாஸ், தன்னைப் பற்றி எழுதத் தயாரா? ‘வன்னிய மக்களுக்கு அவர் செய்தது என்ன? எத்தனையோ வன்னிய சொந்தங்கள் உயிரைக் கொடுத்ததால் வளர்ந்தது இந்தக் கட்சி. அந்தக் குடும்பங்களுக்கு என்ன செய்தார்? மக்கள் தொலைக்காட்சி, வன்னியர் அறக்கட்டளை, தமிழ் ஓசை போன்றவற்றுக்காக வசூல் செய்யப்பட்ட கோடிகள் என்ன ஆனது? அது யார் யாருக்குப் பயன்பட்டது? அந்தப் பணத்தைக் கொண்டு யார் யார் வாழ்ந்தார்கள்?’ இதையெல்லாம் பற்றிப் புத்தகம் எழுதுவாரா?
ராமதாஸ் குடும்பம் கோடியில் புரள்வது எப்படி என்பது சி.பி.ஐ-க்குத்தான் வெளிச்சம்!”
அதை இப்போது சிலர் வெளியில் விட்டுள்ளார்கள். இப்போது ராமதாஸ் ஒரு தலைவர் அல்ல. ஏதோ கதை எழுதிக் கொண்டு இருப்பவர்.
‘‘உங்கள் மீது குண்டர் சட்டம் பாய இருப்பதாகச் சொல்கிறார்களே?
‘தமிழகத்தின் நலனுக்காகப் போராடுகிறவர்கள் மீது, அ.தி.மு.க அரசு சமீபகாலமாகக் குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி அமைதி வழியில் நினைவஞ்சலி செலுத்திய திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் மீது எந்நேரத்திலும் குண்டர் தடுப்புச் சட்டம் பாயலாம் என்ற நிலை. மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிராக உணர்வுபூர்வமாகப் போராடும் மக்களை இதுபோன்ற சட்டங்கள் மூலம் ஒடுக்கிவிட முடியாது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. லஞ்சம், ஊழல் என நிர்வாகச் சீர்கேட்டில் மூழ்கியிருக்கும் தமிழக அரசு, தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசின் காலடியில் மண்டியிட்டு அடகு வைத்துள்ளது. இதனால் என்னை எப்படியாவது முடக்கிவிட மத்திய, மாநில அரசாங்கங்கள் நினைக்கின்றன.
‘‘மத்திய அரசையும் தமிழக அரசையும் ஒரு சேர எதிர்க்கிறீர்களே?
‘இரண்டு அரசுகளுமே தமிழர் விரோதப் போக்குடன்தான் இயங்குகின்றன. உதய் மின் திட்டம், நீட் தேர்வு, ஜி.எஸ்.டி சட்டத்தை எல்லாம் ஜெயலலிதா எதிர்த்தார். அதையெல்லாம் இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு தலைவணங்கி ஏற்றுக்கொண்டுவிட்டது.
இதுவா ஜெயலலிதா வழிகாட்டுதலில் நடக்கும் அரசு?
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நீட் தேர்வு, ஜி.எஸ்.டி சட்டமெல்லாம் வந்திருக்குமா?
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடுகிறார்கள். ‘டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்’ என்று பெண்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அந்தப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார் எடப்பாடி. ‘பதவி எங்களுக்குத் துண்டு போன்றது. ஆனால், கொள்கை எங்களுக்கு வேட்டி போன்றது’ என்றார் அண்ணா. ஆனால், இப்போது எடப்பாடி முதல்வர் நாற்காலிக்காகத் துண்டும் இல்லாமல், வேட்டியும் இல்லாமல் ஆட்சி நடத்துகிறார்.’
‘தி.மு.க அணியில் சேரத் திட்டமா?”<">‘‘கூட்டணிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும்தான். எல்லா நேரத்திலும் தேர்தல் அரசியலை மட்டுமே மனதில் வைத்துச் செயல்பட முடியாது. இனம், மொழி சார்ந்த போராட்டங்களுக்கு முதல் ஆளாக நிற்போம்.”;"
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: தி.குமரகுருபரன்</
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக