வியாழன், 20 ஜூலை, 2017

உன்னை என்ன செய்கிறேன் பார்? சசிகலா - ரூபா கடும் வாக்குவாதம்!


ரூபாவுக்கு ராமமூர்த்தி என்கிற கைதிதான் சிறையில் நடக்கும் அநியாயங்கள் பற்றி முதலில் தகவல் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து 32 கைதிகள் ரூபாவை சந்தித்து சிறையில் நடக்கும் கொடுமைகளை சொன்னார்கள். ராமமூர்த்தியும் 32 கைதிகளும் சசிகலா சிறையில் நடத்தும் சாம்ராஜ்யத்தை பற்றித்தான் முதலில் சொன்னார்கள். அவர்கள் சொல்வதை வீடியோவில் பதிவு செய்து கொண்ட ரூபா, நேராக சசிகலாவின் ஜெயில் அறைக்குப் போயிருக்கிறார். சசிகலாவின் அறையில் டி.வி., பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. அவற்றை ரூபா வீடியோ எடுத்தார். சசிகலாவின் சிறை அறைக்கு முன்பு ஒரு வரவேற்பறை இருந்தது. அதையும் வீடியோ எடுத்தார் ரூபா. இதனால் சசிகலா கோபமானார். "நீ எப்படி எனது அறைக்குள் வர முடியும்' என கோபப்பட்ட சசிகலாவிடம், "நான் சிறைத்துறை அதிகாரி. எனக்கு உரிமையுள்ளது' என ரூபா கடுமையான குரலில் சொன்னார். "நீ என்னை சாதாரணமாக நினைத்துக் கொண்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார்' என சசி ஆவேசமாக, "அதற்குமுன் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை பார்க்கத்தானே போகிறீர்கள்' என சவால் விட்டு வந்தார் ரூபா. அதன்பிறகே, ரூபா தன் மேலதிகாரிகளுக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பினார்.


அந்த ரிப்போர்ட்டின் ஒரு பகுதி மீடியாக்களுக்கும் கிடைக்க, விஷயம் பரபரப்பானது. சிறையில் சசிகலாவின் ராஜ்ஜியமே தொடர்கிறது என்கிற உயரதிகாரிகள், ""ஜெயிலுக்குள் மாடுலர் கிச்சன் அமைக்கப்படுவதற்கு முன்பு, அவருக்கு வெளியில் உள்ள அபார்ட்மெண்ட்டிலிருந்து உணவு கொண்டு வரப்படும். அந்த உணவு சிறைக்குள் வரும்போது சி.சி.டி.வி. கேமரா ஆஃப் செய்யப்பட்டுவிடும்.

முதல் 2 மாதங்கள் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. அதன்பிறகே, உள்ளேயே ஸ்பெஷல் கிச்சன் ரெடியானது. அதுபோலவே, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பார்வையாளர்கள் எண்ணிக்கையையும், விசிட்டிங் நேரத்தைக் கடந்த சந்திப்புகளையும் பதிவு செய்யாமல் இருக்க சி.சி.டி.வி. ஆஃப் செய்யப்படுவது வழக்கம். இவற்றையெல்லாம் டி.ஐ.ஜி ரூபா திரட்டியிருந்தார். அவற்றை அழிப்பதில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளார் சசிகலா'' என்கிறார்கள். "5 மாதகாலமாக சிறையில் உள்ள சசிகலா, தனக்காகத் தளர்த்தப்பட்ட சிறைவிதிகள் குறித்த ஆவணங்களை மறைப்பதற்கு, சிறை டூட்டியில் உள்ள அதிகாரிகளையே பயன்படுத்தியுள்ளார்' என்கிற சிறை வட்டாரம்,

 ""உள்ளே நடப்பதை முழுமையாக மறைப்பது அவருக்கு அத்துபடி. உங்கள் தமிழகத்தின் சக்திவாய்ந்த முதல்வராக இருந்த ஜெ. உடல்நலமின்றி சிகிச்சை பெற்ற போது, அவர் எப்படி இருக்கிறார், என்னவிதமான சிகிச்சை முறைகளைப் பெறுகிறார் என்பதையே முழுமையாக மறைத்து, இட்லி சாப்பிடுகிறார் என செய்தி பரப்பியவராயிற்றே சசிகலா. இன்றுவரை போயஸ் கார்டன் மற்றும் அப்பல்லோ சி.சி.டி.வி ஃபுட்டேஜ்கள் வரவில்லை. இனியும் அவை வெளிவர வாய்ப்பில்லை. வந்தாலும் பல மறைப்புகள்-மார்ஃபிங்குகள் இருக்கும். ஒரு முதல்வரையே 75 நாட்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்தவர் ஆயிற்றே. அப்படிப்பட்டவருக்கு டி.ஐ.ஜி.யை கையாளவா தெரியாது?'' என்கிறார்கள். தாமோதரன் பிரகாஷ் நக்கீரன்

கருத்துகள் இல்லை: