செவ்வாய், 18 ஜூலை, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் தற்கொலை முயற்சி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது. மாரடைப்பில்
 சென்னை, அயனாவரத்தில் உள்ள நாகேஷ்வரா குருசாமி தெருவில் வசித்து வருபவர் குளோரியா,33. இவர் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நான்கு மாதங்களுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரவீன்குமார்,7, சுஜித், 6 என இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு. கடந்த, 16ம் தேதி மதியம் இரண்டு குழந்தைகளும் கெட்டு போன உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறி, அண்ணா நகரில் உள்ள சுந்தரம் அறக்கட்டளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விசாரிக்க தொடங்கினர். அவர்களிடம் கெட்டு போன உணவு தான் பிரச்னைக்கு காரணம் என குளோரியா கூறியுள்ளார்.


பழைய மாத்திரைகள்
ஆனால், நேற்று மாலை, வீட்டில் இருந்த பழைய மாத்திரைகளை சாப்பிட்டு குளோரியா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை, அப்பல்லோ மருத்துவமனையில் அவரது மூத்த சகோதரியும், அவரது கணவரும் சேர்த்துள்ளனர். பின்னர் அன்று இரவு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு நர்ஸ் குளோரியா சிகிச்சை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தினமலர்

கருத்துகள் இல்லை: