சனி, 22 ஜூலை, 2017

பிரபலமான Gas – மனுஷ்ய புத்திரன்

பிரபலமான Gas
ரு பிரபல மனிதருக்கு
எப்போதாவதுதான்
Gas ஐ விடவேண்டும் போலிருக்கிறது
அப்போது அவர்
எல்லோருக்கும் கேட்கும்படியாக
ஒரு Gas விடுகிறார்
அது நகரத்திற்கு மேலாக
‘டமாரெ’ன்று வெடிக்கிறது
போன மாதம்
இன்னொரு பிரபலமான மனிதர்விட்ட gas ஐ  விட’
இந்தக் gas பெரிதாக இருந்தது.
நகரவாசிகள் அனைவரும்
அந்த சத்தைக் கேட்கிறார்கள்
அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்
அந்த gas வெடித்த இடத்தில்
ஒரே புகைமண்டலமாக இருக்கிறது
சத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்
சில நொடிகளில் வந்துவிட்டன
ஒரு GAS ஐ  படம் பிடிப்பதில்
அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது

அவர் ஏன் இப்போது
gas விடுகிறார் என்று கேட்கப்படுகிறது
இதற்கு முன் அவர் ஏன் gas ஐ  விடவில்லை
என்றுகூட கேட்கப்படுகிறது
ஒரு பிரபல மனிதருக்கு எப்போது
அஜீரணம் உண்டாகும் என்று
யாருக்குத் தெரியும்
ஒரு கெட்டுபோன பதார்த்தம்
வயிற்றுக்குள் போனால்
பிறகு எதுவுமே அவர் கட்டுப்பாட்டில் இல்லை
மேலும் பிரபல மனிதர்கள் விடும் gas
அவர்களின் gas தானா என்பதே சந்தேகத்திற்குரியது.
பிரபலமான மனிதர்
தான் வெறுக்கும்
யாரோ ஒருவர் முகத்தில்தான் gas ஐ விடுகிறார்
ஆனால் அது ஒரு வரலாற்று தருணமாக
மாறிவிடுகிறது.
அந்தக் gas இன் வாசனை பற்றி
நகரமே விவாதிக்கிறது
அதன் நறுமணங்கள் பற்றி
வேறு வேறு வியாக்கியானங்கள்
பரவிக்கொண்டிருக்கின்றன
சிந்தனையாளர்கள்
அதன் மருத்துவகுணங்களைப் பற்றி பேசுகிறார்கள்
அவநம்பிக்கைவாதிகள்
அது தொற்று நோய்களை உண்டாக்கக்கூடியது
என்கிறார்கள்
சதிக்கோட்பாட்டாளர்கள்
அது ஒரு உண்மையான gas சே அல்ல
என்று சாதிக்கிறார்கள்
அவரது எதிரிகள்
அவரின் ஆசன வாயிலில்
தார் ஊற்றி மூடவேண்டும் என்கிறார்கள்
மக்களுக்கு மிகவும் அலுப்பாக இருக்கிறது
அவர்கள் வாழ்க்கையில்
எந்த மாற்றமும் நடப்பதில்லை
திடீரெனெ விடப்படும்
ஒரு சப்தமான gas
ஒரு ஆசுவாசத்தைக் கொண்டுவராதா
என்று ஏங்குகிறார்கள்
gas க்கள் காற்றில் கலைந்து செல்பவை
என்பதை அவர்கள் நினைக்கவிரும்பவில்லை.
மக்கள் தெருக்களில் நின்று
தினம் தினம்
எதெதற்காகவோ போராடுகிறார்கள்
முழக்கங்களை எழுப்புகிறார்கள்
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
அதிகாரத்தால் தாக்கப்படுகிறார்கள்
அவர்களின் குரல்
இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை
ஆனால் ஒரு பிரபலமான gas இன்  சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.
அதிகாரம் துப்பாக்கி முனையில்
பிறந்தது ஒரு காலம்
இப்போது அவை பிரபலமான gas க்களிடமிருந்து
பிறக்கின்றன.
இந்த நகரத்தில்
மாதத்திற்கு ஒரு முறை
யாரேனும் ஒரு பிரபல மனிதர்
தன் பிரமாண்டமான gasஐ
விடுவதற்கு வருகிறார்.
நன்றி: –  மனுஷ்ய புத்திரன் வினவு   
பி கு :மதிப்பிற்கு உரிய கவிஞர் பெருமகன் மனுஷ புத்திரன் அவர்கள் Gas என்று அடியேன் பதிவிட்ட இடங்களில் குசு என்ற பதத்தையே பயன்படுத்தி உள்ளார். . அந்த வார்த்தையையே பயன்படுத்த விரும்புவோர் தயவு கூர்ந்து மன்னிக்கவும்

கருத்துகள் இல்லை: