செவ்வாய், 18 ஜூலை, 2017

இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது..!!

Prasanna VK l உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவில்
ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான கலாச்சாரத்தையும், வழக்கத்தையும் கொண்டு இருக்கும். இது இந்தியாவின் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா, கலாச்சாரத்தில் மட்டுமில்லை நாட்டின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கும் மிகவும் வித்தியாசமானது என்பதை உறுதி செய்துள்ளது. ஆம் இந்தியாவின் ஜிடிபி-யில் வெறும் 3 மாநிலம் தான் அதிகளவிலான பங்கீட்டை அளிக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சரக்கு மற்றும் சேவையின் சந்தை விலையை வைத்து காலாண்டு வாரியாவும், வருடாந்திர வாரியாகக் கணக்கிடப்பட்டும். இதுவே இந்தியாவின் வளர்ச்சி விகிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஜிடிபி அளவீட்டில் விவசாயத் துறை உற்பத்தி முதல் ஐடி துறை ஏற்றுமதி செய்யும் மென்பொருள் சேவை வரை அனைத்தும் அடங்கும். தற்போதைய நிலையில் இந்தியாவின் ஜிடிபி 2.25 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யாமல் இருந்திருந்தால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.


இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. இந்த 3 மாநிலங்களின் ஜிடிபி மதிப்பு 778 பில்லியன் டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜிடிபி அளவீட்டில் இந்தியாவில் பணக்கார மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பன்னாட்டு வர்த்தகம் முதல் மாஸ் மீடியா, ஏரோஸ்பேஸ், டெக்னாஜி, பெட்ரோலியம், பேஷன், ஆடை தயாரிப்பு, சுற்றுலாத் துறை எனப் பல வழிகளில் வருமானத்தைப் பெறுகிறது.

அனைத்திற்கும் மேலாக மொத்த இந்தியாவிலும் நிலக்கடி மின்சார உற்பத்தியில் 13 சதவீதமும், அணுமின் உற்பத்தியில் 17 சதவீதத்தையும் மகாராஷ்டிரா அளிக்கிறது. மேலும் இந்திய பங்குச்சந்தையில் 70 சதவீத பணப் பரிமாற்றங்கள் மும்பையில் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இருப்பது நம்ம தமிழ்நாடு. 2014-15 நிதியாண்டின் படி தமிழ்நாட்டின் ஜிடிபி பங்கீடு 150 பில்லியன் டாலராக உள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் விவசாயத் துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. விவசாயத் துறையைத் தாண்டி தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. காக்னிசென்ட், கோவேசிஸ், வெரிசோன். ஐசாப்ட், இன்வென்சிஸ், ஸ்க்னெய்டர் எலக்டிரிக், நிஸ்ஸான் மோட்டாஸ், டிவிஎஸ், எனப் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது. கடந்த 10 வருடத்தில் கர்நாடகா ஜிடிபியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. விவசாயம், தொழிற்துறை, சேவைத் துறை என இந்த மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மேலும் மென்பொருள் சேவையிலும், ஏற்றுமதியிலும் இந்தியாவின் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது கர்நாடகா. 1960களில் மேற்கு வங்காள மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 390 ரூபாய், தமிழ்நாட்டில் 330 ரூபாய். இதே 2014இல் பெங்காளிகளின் வருடாந்திர வருமானம் 80,000, தமிழர்களின் சராசரி வருடாந்திர வருமானம் 1,36,000 ரூபாய். அதேபோல் 1960இல் இந்தியாவின் ஏழை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு 2014இல் நாட்டின் பணக்கார மாநிலங்களில் ஒன்றாக விளங்கியது.

தமிழ்நாட்டைப் போல் தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

1960க்கும் 2014ஆம் ஆண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. 1960இல் இந்தியாவின் ஜிடிபியில் பங்களிக்கும் டாப் 3 மாநிலங்களுக்கும், கடைசி 3 மாநிலங்களுக்கும் 1.7 மடங்கும் வித்தியாசம் இருந்தது. 2014இல் இது 2 மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் பிராந்திய அளவீடுகளில் பார்க்கும்போது தென் மாநிலங்களே முதல் இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவிற்குப் பின், வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்குப் பகுதிகள் இடம்பிடித்துள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை: