திங்கள், 17 ஜூலை, 2017

வெங்கையா நாயுடு .. பாஜகவின் துணை குரியரசு தேர்தல் வேட்பாளர்.

துணை குடியரசுத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் -18 ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை, துணை குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் வெங்கைய நாயுடு என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக உள்ளார் வெங்கைய நாயுடு. 2002ல் இருந்து 2004 வரை பாஜகவின் தேசிய தலைவராக இருந்தவர் வெங்கைய நாயுடு. ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1949ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் வெங்கையநாயுடு.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: