செவ்வாய், 18 ஜூலை, 2017

பரப்பன அக்கிரஹர சிறையில் அரசபோகத்தில் முத்திரை தாள் மோசடி அப்துல் கரீம் தெல்கி... இதெல்லாம் இங்கு சாதரணமப்பா,,


Telgi moved to more complex counterfeiting when he began to counterfeit stamp paper. He appointed 350 people as agents who sold the fakes to bulk purchasers, including banks, insurance companies, and stock brokerage firms. The size of the scam was estimated to be more than ₹200 billion (US$3.1 billion).[1] One aspect of the scandal that caused much concern was that it required the involvement of many police officers and other government employees including Nikhil Khotari. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவரது அண்ணியான இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகளை வழங்க சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறை டிஐஜி ரூபா 1) ஸ்பெஷல் சமையலறை- சசிகலாவுக்கு ஸ்பெஷல் சமையலறை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
2) சிறையில் சில வசதிகளை பெற சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது.
3) மேலும் முத்திரைத்தாள் மோசடி குற்றவாளி அப்துல் கரீம் தெல்கி 4 உதவியாளர்களுடன் சிறை வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். அவருக்கு உதவியாளர்கள் மசாஜ் கூட செய்து விடுகின்றனர். அவரது வீல்சேரை தள்ளுவதற்கு கோர்ட் ஒரு உதவியாளரைதான் அனுமதித்தது. ஆனால் அவருக்கு 4 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை சிசிடிவி கேமரா மூலம் நீங்களே பார்க்க முடியும் என நம்புகிறேன் என்றும் தனது உயர் அதிகாரியிடம் ரூபா தெரிவித்துள்ளார்.

4) மேலும் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல்- கடந்த 29 ஆம் தேதி தலைமை மருத்துவ ஊழியர் உட்பட 10 பேர் கைதி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரியையும் காணவில்லை. ஆனால் இதுகுறித்து கைதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
5) சிறையில் கஞ்சா விநியோகம் போதை பொருள் பயன்படுத்துவது தொடர்பாக 25 கைதிகளை ஆய்வு செய்ததில் அவர்களில் 18 பேர் போதை பொருள் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. சிறைக்குள் கஞ்சா எப்படி விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ரூபா கூறியுள்ளார்.
6) மருத்துவ அறிக்கைகள் மாயம்- கைதிகள் மருத்துவ அறிக்கைகளை அழிக்க முயற்சிக்கின்றனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருந்த சில மருத்துவ அறிக்கைகள் மாயமாகியுள்ளன என்றும் ரூபா தனது உயர் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
7) மருந்தகத்தை ஆட்கொண்ட கைதிகள்- ஜெயிலில் உள்ள மருந்தகத்தையும் கைதிகள் ஆட்கொண்டுவிட்டனர். தூக்க மாத்திரை போன்றவை அவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
8) மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல்- வெளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரி கைதிகள் மருத்துவர்களை அச்சுறுத்துகின்றனர். பல மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன என்றும் டிஐஜி ரூபா குற்றம்சாட்டியுள்ளார்.
9) இதுதொடர்பாக விசாரணையில் இறங்கியது முதல் சிறைத்துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ் தனது வேலையில் குறுக்கிட்டு வருவதாகவும், கடந்த 11ஆம் தேதி தனக்கு மெமோ கொடுத்ததாகவும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். மேலும் தனது மெமோவில் எதற்காக சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்றேன் என விளக்கமும் கோரியுள்ளார், ஆனால் தனக்கு சென்ட்ரல் சிறைக்கு செல்ல முழு அதிகாரமும் உள்ளது என்றும் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
இதற்கு முத்தாய்ப்பாக சிறைத்துறை டிஜிபி மறுப்பு டிஜிபி ஹெச்எஸ்என் ராவுக்கு சிறையில் நடப்பதெல்லாம் தெரியவில்லை. அவரை சில அறிக்கைகள் சென்றடைவதும் இல்லை என்றும் ரூபா தனது உயர் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள டிஜிபி ராவ் மெமோ கொடுக்கப்பட்ட காரணத்தினால் தேவையில்லாத குற்றசாட்டுகளை ரூபா கூறுவதுதாக கூறியுள்ளார்.
உயர் அதிகாரிகளுக்கு கடிதம் இதுதொடர்பாக தனது மேல் அதிகாரிகளுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் பல்வேறு விதிமீறல்களை சுட்டிக்காட்டிய அவர் கூறிய கடித குற்றசாட்டு பத்திரிகைக்கு எப்படியோ கசிந்து உள்ளது. ஆனாலும் லஞ்சம் கொடுத்த ஆதாரம் எதுவும் ரூபா தரப்பில் கசியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது கடிதம் கசிவு போலவே தான் குட்கா விவகாரம் வருமான வரித்துறை விசாரணை கடிதம் பிஜேபி ஆதரவு தொலைக்காட்சி டைம்ஸ் நொவ் கிடைத்து வெளியிட்டு அதிமுகவுக்கு தலைவலி உண்டு பண்ணியது. இதனால் மீடியா மூலம் அதிமுக அரசை பணிய வைக்கிறது என்று அதிமுகவினர் தனியாக புலம்புகின்றனர்.
சீராய்வு மனு வரும் நேரத்தில் இந்த செய்தியை முன்னிட்டு தங்கள் தரப்புக்கு பின்னடைவு வருமோ என்ற கலக்கத்தில் சசிகலா குடும்பத்தினர் உள்ளதாக தகவல் கசிகிறது. tamilthehindu

கருத்துகள் இல்லை: