செவ்வாய், 18 ஜூலை, 2017

டாக்டர் கிருஷ்ணசாமி.. தேவேந்திர குல வேளாளர் பட்டியல் திருத்தம் தேவை?

Palai Karthik :கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற கிருஷ்ணசாமி மற்றும் சில குழுக்கள் மூலமாகவும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
4. பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
7. காலாடி, சீர்மரபினர் (எண் 28) [8]
&
8.இப்போ எட்டாவதா பட்டியல் பிரிவு எண்.9ல் உள்ள  Bandi (எண்.9) என்பதையும் பாண்டி என்று மாற்றி ஒரு குரூப் சேர்த்து இருக்கிறதா கூடுதல் தகவல்!!!

இவர்களது கோரிக்கை அரசால் நிறைவேறுவதற்கு முன் இந்த பிரிவில் மூப்பன் மற்றும் காலாடி என்ற பிரிவினர் பள்ளர் என்று போட்டு இதுவரையும் இன்னும் பட்டியல் பிரிவுகளின் பங்கை அனுபவித்து பிறரை வஞ்சித்து வருவதை முதலில் அரசாங்கம் கண்டறிந்து நிறுத்த வேண்டும்.

எனக்கு ஒரு சந்தேகம் காலாடி மற்றும் மூப்பன் இன குழு மற்ற பள்ளர் இன பிரிவுகளில் சம்பந்தம் வைத்து கொள்கின்றனரா? ஏனெனில் பட்டியல் பிரிவில் உள்ள வள்ளுவர் இன குழு மற்றவர்களுடன் சம்பந்தம் வைத்து கொள்வதில்லை...

கருத்துகள் இல்லை: