thetimestamil: கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர்.
மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் மாதவிடாய் கோளாறு என்பது பெண்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்களிடம் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே பெண்களுக்கு ஆதரவு தரும் விதமாக நாங்கள் இம்முடிவை மேற்கொண்டோம். எங்களுக்காக இரவு-பகல் பாராமல் உழைக்கும் பெண் ஊழியர்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக மும்பையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ‘கல்சர் மெஷின்’. முதன்முதலில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. “மாதவிடாய் காலத்தின் முதல்நாளில் பெண்களுக்கு அதிகளவில் சிரமம் ஏற்படும். எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இதில் கூச்சப்பட ஏதுமில்லை. இது பெண்கள் வாழ்க்கையின் அங்கம் என அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு தலைவர் தேவ்லீனா சன்யால் மஜும்தார் தனது விளக்கத்தை வீடியோவாக அறிவிப்பின் போது வெளியிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக