வெள்ளி, 21 ஜூலை, 2017

தமிழக அமைச்சர்களின் ஈமெயிலை காணவில்லை! கமலின் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!

Sutha சென்னை: உங்களது அமைச்சர்கள் மீதான புகார்களை அவர்களுக்கே இணையதளங்கள் மூலம் அனுப்புங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் அரசு இணையதளத்தில், அமைச்சர்களின் பக்கங்களில் இணையதள, இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்களின் புரபைல் பக்கத்தில் இடம் பெற்றிருந்த இமெயில், இணையதள முகவரிகள் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இணையதளத்தில் திடீரென அனைத்து இமெயில் ஐடிகளும் நீக்கப்பட்டிருப்பது ஏன் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.
அதேசமயம், தமிழக சட்டசபை இணையதளத்திற்குப் போய்ப் பார்த்தால் அங்கு எம்.எல்.ஏக்களின் இமெயில் ஐடிகள் உள்ளன. கமல்ஹாசன் கொடுத்த இணைப்புக்குள் போனால் யாருக்கும் இமெயில் கிடைக்காத வகையில் மாற்றியுள்ளனர். ரஜினி போர் வரும் வரை காத்திருப்போம் என்று கூறியிருந்தார். ஆனால் கமல்ஹாசனோ, சொல்லாமல் கொள்ளாமல் போரைத் தொடுத்து விட்டார். இதனால் நிலைகுலைந்து போயுள்ளனர் தமிழக ஆட்சியாளர்கள்.


அமைச்சர்களுக்கு கண்டனம் தன்னிடம் ஆதாரம் கேட்ட அமைச்சர்களுக்குப் பதிலடி கொடுத்த கமல்ஹாசன், மக்களே உங்களிடம் ஆதாரத்தைக் கொடுப்பார்கள். நடுவில் நான் ஏன் பூசாரி என்று கூறி அமைச்சர்களின் இணையதளம், இமெயில் முகவரிகள் அடங்கிய அரசின் இணையதள இணைப்பை வெளியிட்டார். இதனால் அமைச்சர்கள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலையில்தான், கமல் அறிக்கை விட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்து அமைச்சர்களின் இணையதளப் பக்கத்திலும் இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளன. தொலைபேசி எண்ணைக் கூட நீக்கியுள்ளனர். எல்லாமே வெற்றிடமாக உள்ளது.

அரசு இணையதள பக்கத்தில் அவர்கள் வகிக்கும் துறை சம்பந்தப்பட்ட தகவல் மட்டுமே உள்ளது. துறை ரீதியாக அமைச்சர்களின் தனித்தனி விவர குறிப்புகளிலும் அவர்களின் முகவரி, இமெயில் விவரம், தொலைபேசி எண் போன்ற தொடர்பு விவரங்கள் இல்லை. கமல்ஹாசன் அறிக்கை வரும் வரை இதெல்லாம் இருந்துள்ளது. அவரது அறிக்கைக்குப் பிறகுதான் தூக்கியுள்ளனர். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கத்திலும் கூட இணையதள, இமெயில், தொலைபேசி விவரங்களைத் தூக்கியுள்ளனர்.

இதற்காக மக்கள் குழப்பமடைய தேவையில்லை. இந்த அரசு இணையதளத்திற்குப் போனால் அத்தனை பேரின் இமெயில் முகவரியையும் பிடிக்கலாம்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: