அரியலூர் மாவட்டம் சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் சிலை கடத்தில்
வழக்கில் சுபாஷ்சந்திர கபூர் உட்பட 11 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில்
நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் 2008-ம் ஆண்டு 20-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் திருடு போயின. இந்த சிலைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளியான அமெரிக் காவைச் சேர்ந்த சுபாஷ்சந்திர கபூரை (60) கைது செய்தனர். இந்த வழக்கில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியான சென்னை பாக்கியகுமாருக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை யும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சித்தமல்லி கோயில் சிலை கடத்தல் வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். சுபாஷ்சந்திர கபூர் திருச்சி மத்திய சிறையிலும், பாக்கியகுமார் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சித்தமல்லி கோயிலில் கடத்திச் செல்லப்பட்ட பூமிதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகிய ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் இருந்து சுபாஷ்சந்திர கபூர் கும்பகோணம் அழைத்து வரப்பட்டார். கும்பகோணம் சிலை பாதுகாப்பு மையத்தில் இருந்து பூமிதேவி, சக்கரத்தாழ்வார் சிலை கள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன.
சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் பாலகிருஷ்ண குருக்கள் ஆஜ ராகி, இந்தச் சிலைகள், தான் பூஜை செய்த பூமிதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் சிலைகள்தான் என நீதிபதியிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் சுபாஷ்சந்திர கபூர் உட்பட 11 பேர் ஆஜராகினர். பாக் கியகுமார் நேற்று ஆஜ ராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். tamilthehindu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக