வியாழன், 20 ஜூலை, 2017

சாரு ஹாசன் அதிரடி : குற்றவாளியான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் !

s.charu.hasan :…….. மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு…. 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்…? குற்ற வாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்… கையாடல் குற்றவாளியாக திர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.. இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எங்கள் செலவில் குற்றவாளிகள் குடும்பத்துக்கு பார்ப்பன அக்கிரகாரத்தில் ஒரு மாளிகை கட்டி கொடுத்து விட்டார்கள் என்று 60 சதவிகிதம் சசிகலா அவர்கள் கட்சியை எதிர்த்தவர் நினைப்பது எங்கள் அறியாமையோ..?…
 இன்று ஆட்சியில் இருப்பவர்கள் வெளிப்படையாகவே சிறையில் இருக்கும் சின்னம்மாள் சொல்படி ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் சிந்தனையை உச்சநிதிமன்ற தீர்ப்பு மாற்றியிருக்கிறது. என்று நினைக்கிறேன்…

ஒன்று புரிகிறது அதிமுகவில் ஜயகுமார் ஒருவர்தான் இதுவரை ல்ஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது.... ஆனால் உழலுக்கு இன்று துணை போகிறாரே.. ஆட்சியில் இருக்கும் மந்திரி வீட்டில ரெய்டு பிரபல காண்ட்ரக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட் .. நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழ்லுகு சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்றுகூட சொல்ல முடியவில்லை. ?

கமலஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லதுதான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. தமிழ் மக்கள் ஒரு பெரியாரின் நேர்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள். 1952 ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு சென்னை இராஜதானியில் அறுதி பெரும்பான்மை இல்லாமல் போனது. அன்று பெரியார் தலையிட்டு அவர் சொன்ன கொள்கைகளை ஒப்புக் கொள்ளும் காமன்வீல் பார்டி தலவர் மாணிக்கவேல் நாயக்கரையும் பமகவின் அன்றைய தலைவர் பழனிச்சாமி கவுண்டரையும் அமைசரவையில் சேர்த்துக் கொண்டு இராஜாஜி அவர்களை முதல்வராக ஒப்புக்கொண்டால் 14 அல்லது 15 உறுப்பினர்களை காங்கிரசுக்கு வாக்களிக்க செய்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவி செய்தார்… பின்னால் பெரியார் யோசனைப்படி இந்த இரு கட்சிக்கரர்களையும் காங்கிரசில் இணைய செய்தார். அன்று அண்ணா பெரியாரிடமிருந்து பிரிந்து திமுகவை 1949 ஆண்டு ஆரம்பித்தவர். 1952 தேர்தலில் திமுக போட்டியிடவே இல்லை. 1957 தேர்தலில்15 உறுப்பினருடன் ஆரம்பித்த திமுக 62 இல் ஐம்பதாகி 67 இல் எம்ஜீஆர் சுடப்பட்டதின் எதிர் விளைவாக ஆட்சிக்கு வந்தது..
……………………கமல ஹாசன் ஒரு பார்ப்பன சாதியில் பிறந்தவர் என்பதை திராவிட தமிழன் தான் சாகும் வரை மறக்க மாட்டான்… !


சாருஹாசன் தனது முகநூல்  பதிவுகளில் இப்படி மிகவும் காரசாரமாகபதிவிட்டுள்ளார் 

கருத்துகள் இல்லை: