ஐ.தே.க. தலைவராக கரு ஜெயசூரியா பாராளுமன்ற குழுவில் ஏற்பு நேற்றைய கூட்டத்தில் பதற்றம்: காரசாரம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க வேண்டுமென்று ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இது பற்றி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கட்சியின் செயற்குழுவுக்கும் கொடுக்கப்படுமென்று அறிவிக்கப்படுகிறது.
மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சில அங்கத்தவர்கள் உணர்ச்சி பூர்வமாக பேசியதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுந்து கட்சியின் பாராளுமன்ற குழுவுக்கு தலைவரை தெரிவு செய்யும் அதிகாரம் இல்லையென்றும் அதுபற்றி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் செயற்குழுவுக்கே இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் இதனை எதிர்த்து பலர் கூச்சமிட்டபோதும் அவர் அங்கிருந்து வெளியேற செய்த முயற்சியின் போது சிலர் அங்கு அமைதியை நிலைநாட்டியதாகவும் தெரிவித்தனர்.அப்போது ஒரு இளம் பாராளுமன்ற உறுப்பினர் உங்களது தலைமைத்துவம் எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் கரு ஜயசூரியவை தலைவராக நியமிப்போம் என்று கூறியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சி 15 தேர்தலில் தோல்வியடைந்துள்ளதுடன் கட்சியின் வாக்குப் பலம் 20வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் 64 உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாகவும் தெரிவித்ததுடன் கட்சியின் தலைமைத்துவத்தை கரு ஜயசூரியவுக்கு கொடுக்க வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த பிரேரணையை ரஞ்சித் மத்தும பண்டார முன்மொழிந்திருக்கிறார்
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறினான். பொறுத்து இருந்து பார்ப்போம். நமகேன்னவோ நமது ரணில் விக்கிரமாதித்தன் மீண்டும் தனது தலைமை பதவியை தக்க வைத்துகொள்வார் என்றே தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக