புதன், 10 ஆகஸ்ட், 2011

பாரதிராஜா:சக மனிதனுக்காக சிந்திப்பவர்கள் பெருக வேண்டும்



சக மனிதனுக்காக சிந்திப்பவர்கள் பெருக வேண்டும்: பாரதிராஜாமக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பங்கேற்று பேசினார்.அவர் மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. புத்தகங்கள் படிப்பது மகிழ்ச்சியான செயல். புத்தகங்கள் மீதுள்ள ஆர்வத்தில் சிலர் அதிக அளவில் புத்தகங்களை வாங்கி வைத்து, படிப்பதற்கு நேரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
புத்தகங்களை வாசிக்க நேரம் கிடைக்காதவர்கள், விடுமுறை எடுத்துக் கொண்டு இடையூறு இல்லாத இடத்துக்குச் சென்று புத்தகங்களை வாசித்துவிட்டு வருவதில் தவறில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருப்பதைப் போல், புத்தக அறை இருக்க வேண்டும். அந்த அறையில் குழந்தைகளை அமரச் செய்தால், தமிழகம் இலக்கிய பூமியாகவும், சிந்தனை பூமியாகவும் மாறிவிடும் என்றார்."
அவர் மேலும், கொள்கைகளைத் தூக்கியெறிந்துவிட்டு சக மனிதனுக்காக சிந்திக்கும் மனிதர்கள் பெருக வேண்டும் என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: