மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச தரத்திற்கிணங்க முழுமையான சுயாதீனமான நம்பகமான ஏற்றுக் கொள்ளத்தக்க விசாரணையை இலங்கை நடத்தவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக முழுமையான நம்பகமான சுயாதீனமான ஏற்றுக்கொள்ளத்தக்க விசாரணைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். இலங்கையர்கள் இவ்விசாரணையை சர்வதேச தரத்திற்கமைய அவர்களாகவே செய்வதைக் காண நாம் விரும்புகிறோம். எனவே இலங்கை விமர்சகர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் உங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சர்வதேச தரத்திலான விசாரணையை ஆரம்பியுங்கள்'' என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நியுலண்ட் கூறியுள்ளார். செவ்வாய்க்கிமை வோஷிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதை விரைவாக செய்யுமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இலங்கையர்கள் தாமாகவே இதை செய்வார்கள் என நாம் நம்புகிறோம். (மேலும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக