ஆர்.எஸ்.எஸ் – பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். உங்களுக்கு அதன் தரமோ தராதரமோ போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸின் கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை மற்றும் இன்னபிற யோக்கியதைகளை மக்களுக்குத் துலக்கமாக விளக்கும் வாழும் உதாரணம் தான் சுயம்சேவகர்கள். அதில் முதன்மையானவர் தான் சுயம்சேவக் எடியூரப்பா.
பல்வேறு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவரும், ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் சொல்லும் சுய சேவையில் கரைகண்டவருமான எடியூரப்பாவுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அதில் சமீபத்திய சிறப்பு அவர் வழங்கிய ராஜினாமாக் கடிதம். உலகிலேயே நல்ல நேரம் பார்த்து ராஜினாமாக் கடிதம் கொடுத்த ஒர்ர்ரே முதலமைச்சர் அனேகமாக இவராகத் தான் இருக்க முடியும். நல்ல விஷயங்கள் நல்ல நேரத்தில் தான் நடக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படிச் செய்தாரா தெரியவில்லை. ஆனால், இந்த சாதனையை இனிமேல் ஜெயலலிதாவால் கூட மிஞ்ச முடியாது என்பது மட்டும் திண்ணம்.
மேலும் விஷயத்துக்குள் போகும் முன் விவரங்களுக்குள்ளும் கொஞ்சம் உலாத்தி விட்டு வரலாம் நண்பர்களே!
அதாகப்பட்டது, ‘கம்யூனிஸ்ட்டு’ செஞ்சீனம் மேன்மேலும் உயர்வதைத் தடுத்து பரதவர்ஷத்தின் புகழ்க் கொடி பாரில் பட்டொளி வீசிப்பறக்க ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தீவிரமாக சிந்தித்து ஒரு திட்டத்தைத் தயாரித்தார்கள். அதன்படி, கருநாடக மாநிலம் பெல்லாரியில் கிடைக்கும் இரும்புத் தாதுவை சல்லிசான விலைக்கு சீனத்துக்கு அனுப்பி, அதன் மூலம் உண்டாகும் இரும்புக் குவியலாலேயே சீன தேசத்தை அழுத்திக் கீழே தள்ளி விட வேண்டும் என்பது தான் அந்தத் திட்டம். இதற்காகவே ரெட்டி சகோதரர்கள் என்கிற மூன்று முத்தான சுயம்சேவகர்களிடம் பெல்லாரி மாவட்டத்தையே தூக்கிக் கொடுத்துள்ளார்கள்.
ரெட்டிகளின் நேரடிக் கம்பெனிகளும் பினாமிக் கம்பெனிகளுமாகச் சேர்ந்து இரும்புத் தாதுக்களால் அழுத்தப்பட்டுக் கிடக்கும் பாரதமாதாவின் சுமையைக் குறைக்க வேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில் பெல்லாரி மாவட்டத்தையே தோண்டித் துருவியதற்கு பெற்ற அற்ப கூலி மட்டுமே 16,000 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருநாடக லோக் அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே. சந்தோஷ் ஹெக்டே ஒரு நல்லவர் என்பதை தில்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்களே சான்றிதழ் அளித்திருப்பதால் நாம் அவரின் கூற்றை சந்தேகிக்க வேறு காரணங்களில்லை.
மேற்படி திட்டம் நல்ல முறையில் இயங்கி வந்ததை அடுத்து, தென்னிந்தியாவின் முதல் இராம இராஜ்ஜியத்தின் மாமா மன்னர் எடியூரப்பா அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட784 அதிகாரிகளுக்கு அப்பாவி இரும்பு யாவாரிகள் பல்வேறு பரிசில்களைக் கொடுத்துள்ளனர். மேலும், மன்னரின் புதல்வர்களுக்கும் சில பத்து கோடிகள் கப்பமாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் விவரங்களும் சந்தோஷ் ஹெக்டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே தேசிய அளவில் பாரதமாதாவைக் கூறு போட்டு விற்பதில் சிறப்புப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே பொறாமை கொள்ளும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் சாதனை அமைந்துள்ளதே அதற்குக் கிடைத்துள்ள பெருமைகளில் தலையாயது. ஓரிரு மாநிலங்களில் ராம ராஜ்ஜியத்தை அமைப்பதில் வெற்றி ஈட்டியுள்ள நிலையிலேயே தமது கீர்த்தி மிக்க செயல்பாடுகளால் பாரத மாதாவின் புகழ்க் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுள்ள டவுசர்கள், மத்திய அரசின் அதிகாரத்தையே கைப்பற்றி விட்டார்கள் என்றால் பாரத மாதாவின் கோவணத்தைக் கூற சிறப்பாகப் பறக்க விடுவார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.
ஏற்கனவே இவர்கள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த போது உலகிலேயே யாரும் சிந்தித்திராத வண்ணம், அரசுத் துறைகளை தனியாருக்கும் அந்நியர்களுக்கும் விற்பதற்காக தனி இலாக்காவே வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது மாமா வேலைக்கு இந்துத்துவக் காவிகள் ஒரு போட்டியாக உருவெடுத்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக இருக்கும் காங்கிரசு, சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கையை வைத்து கடந்த மாதம் பஞ்சாயத்தைக் கூட்டியது. கருநாடக பாரதிய ஜனதாவிலேயே புறங்கையை நக்க வாய்ப்புக் கிடைக்காத பிற கோஷ்டிகளும் எடியூரப்பாவிற்கு எதிராய் போர்க் கொடியை உயர்த்தினர்.
குரங்குக் கூட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழும் குரங்கு கீழே விழுந்தவுடன் கையில் அகப்பட்ட உடைந்த கம்பை தூக்கி மற்ற குரங்குகளுக்குக் காட்டுமாம். ஏனெனில், கிளை தாவும் போது கீழே விழுவது குரங்குகளிடையே அவமானகரமானதாகக் கருதப்படுகிறது. அப்படிக் கீழே விழுந்த குரங்கை மற்ற குரங்குகள் கூட்டத்தை விட்டு விலக்கி விடுமாம். அதைத் தவிர்க்கத் தான் கீழே விழுந்த குரங்கு ‘நானாக விழவில்லை; இதோ இந்தக் கிளை முறிந்ததால் தான் கீழே விழுந்தேன்’ என்பதை உணர்த்தும் விதமாக அவ்வாறு செய்யுமாம்.
காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொருத்தவரையில் சிறப்பான முறையில் ஒரு ஊழலில் இருந்து இன்னொரு ஊழலுக்கு மாட்டிக் கொள்ளாமல் தாவும் வரை பிரச்சினையில்லை. மாட்டிக் கொண்டால் மற்றவர்கள் இன்ஸ்டன்ட் யோக்கியர்களாகி விடுவார்கள். எனவே இப்போது கீழே விழுந்த குரங்கான எடியூரப்பாவைப் பார்த்து கீழே விழாத பா.ஜ.க குரங்குகள் கடந்த மாதத்திலிருந்து எக்காளமிடத் துவங்கின. எடியூரப்பாவும் லேசுப்பட்டவர் இல்லையென்பதால், குப்புற விழுந்து மூஞ்சியே மண்ணில் புதைந்து போன நிலையிலும் ‘ மீசையில் மண் ஒட்டலையே’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
எப்படியாவது இவர் கையில் காலில் விழுந்தாவது பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டால் ஆர்.எஸ்.எஸின் கட்டுக்கோப்பை நிலைநாட்டி விடலாம் என்று கருதிய தில்லி மேலிடம், எடியூரப்பாவிற்குத் தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருந்தது. இந்த விஷயமாக நடந்த சமரசக் கூட்டங்களில் எடியூரப்பா வெங்கைய்யா நாயுடுவின் லேப்டாப்பை விசிறி அடித்தார் என்றும், இன்னொரு அமைச்சரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
காங்கிரஸ்காரனுக்கு அரசியலில் அதிக பட்ச பயிற்சியே வேட்டி உருவுதல் தான். இந்த சுயம் சேவக்கோ எகிறி எகிறி....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக