திங்கள், 8 ஆகஸ்ட், 2011

இலங்கையில் ஒரு பிரேமானந்தர்!தலைமறைவாகி உள்ளார்


மந்திர தந்திர வேலைகளின் பெயரால் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார் சிங்கள பிக்கு ஒருவர். இவரின் பெயர் சோபித தேரர். கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர். மந்திர தந்திர வேலைகளில் கை தேர்ந்தவர் என்று மிகுந்த பிரபலம் அடைந்து இருந்தார்.

பல மில்லியன் ரூபய் வரை பெறுமதியான சொத்துக்கள் சேர்த்து இருக்கின்றார். இவரிடம் மந்திர தந்திர வேலைகளுக்கு வருபவர்களில் கணிசமான தொகையினர் யுவதிகள். இவர் மந்திர தந்திர வேலைகளுக்கான தயார்ப்படுத்தல் என்று சொல்லி இப்பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றமை வழக்கம். இந்நிலையில் வானொலி ஒன்றில் வேலை பார்க்கின்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் இவரை மந்திர வேலைக்கு என அணுகி இருக்கின்றார்.

இவருக்கு சோபித தேரர் பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொண்டார். இப்பெண்ணிடம் அந்தரங்கமான கேள்விகளை தொலைபேசியில் கேட்டு இருக்கின்றார். ஜொலியாக இருக்கின்றமைக்கு வர வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார். இவரது உரையாடல் பெண் ஊடகவியலாளரால் ஒலிப் பதிவு செய்யப்பட்டது.

வானொலியில் கடந்த வாரம் ஒலிபரப்பட்டது. இவரின் தொலைபேசி உரையாடலை வானொலியில் பொதுமக்கள் செவிமடுத்தனர். இவர் ஒரு வேடதாரி என்று உணர்ந்தனர். இவரின் மாடி வீட்டை முற்றுகை இட்டனர். இவரது வீட்டில் இருந்து ஆயுதங்கள், மதுபான போத்தல்கள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டன. ஆயினும் இவர் தலைமறைவாகி உள்ளார். பொலிஸார் இவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: