ரிசானாவின் வயதைக் குறைத்து சவுதி அரேபியாவுக்கு அனுப்பிய முகவர் கைதுசெய்ய ப்படவுள்ளார். தலைமறை வாகியிருந்த இவர்கள் நாட்டுக்குள் வந்துவிட்டனர். எனவே அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ரிசானாவை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்கள் ஆறரை வருடங்களாகக் கைதுசெய்யப்படவில்லை. வயதைக் குறைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையமும் தடைசெய்யப்படவில்லை. அவரை மீட்பதற்கான நடவடிக்கை எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரிசானாவின் தந்தை வரவழைக்கப்பட்டு ரகசியப் பொலிஸாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விரைவில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக