''தன்னுடைய குடும்பத்தைச் சுற்றிலும்... குறிப்பாக, மனைவி காந்தியை மையம்கொண்டு சுழல ஆரம்பித்து இருக்கும் சூறாவளிகள் அழகிரியை வருத்தம் அடைய வைத்துள்ளன. 'எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. என் குடும்பத்துக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது!’ என்று திரும்பத் திரும்ப அவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்காக டெல்லி சென்ற அழகிரி, தன்னுடன் காந்தியையும் அழைத்துச் சென்றுவிட்டார். டெல்லி சென்றாலும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மதுரைக்கோ சென்னைக்கோ வந்துவிடுவது அழகிரியின் வழக்கம். ஆனால், இம்முறை டெல்லியைவிட்டு வர மனம் இல்லாமல் இருவரும் அங்கேயே தங்கிவிட்டார்களாம்.''
''மகன், மகள்கள்..?''
''அவர்களை அரசியல் வெப்பம் படாமல், வெளிநாட்டில் செட்டில் பண்ணவும் அழகிரி நினைக்கிறாராம். கடைசி மகள் அஞ்சுகச் செல்வி, அமெரிக்காவில் போய் செட்டில் ஆக இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் சொல்லி இருந்தேன். அந்தக் குடும்பம் அங்கே போய்ச் சேர்ந்துவிட்டது. சினிமா தயாரிப்பில் மும்முரமாக இருந்த துரை தயாநிதி, இப்போது லண்டனில் இருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து, மூத்த மகள் கயல்விழியும் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். அவர்களின் மகனுக்கு பாஸ்போர்ட் எடுத்ததில் ஏற்பட்ட சிறு தவறைத் திருத்துவதற்காக, கடந்த வாரத்தில் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் தன்னுடைய அரசியல் சூழல், தனது வாரிசுகளுக்கு பரவக் கூடாது என்பதில் அழகிரி தெளிவாக இருக்கிறார்.''
''கருணாநிதியின் கட்டளை என்னவாம்?''
''அழகிரி டெல்லியில் இருந்து தனது அமைச்சரவை வேலைகளைப் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார் கருணாநிதி. 'மதுரைக்குச் சென்று, அவன் அமைதியாக ஏதாவது தொழிலை நடத்தி நிம்மதியாக இருப்பான் என்று அனுப்பிவைத்தேன். ஆனால், அங்கு சில மனிதர்கள் அவனை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள்!’ என்று வருந்தினாராம். அதனால்தான், திருவாரூரில் நடந்த கண்டனக் கூட்டத்தில் வீரபாண்டியார், ஜெ.அன்பழகன் கைதுகளைப்பற்றி பேசியவர், மதுரையில் கைதான நபர்களைப்பற்றி பேசவில்லையாம். இதைச் சொல்லும் மதுரைப் பிரமுகர் ஒருவர், 'அழகிரி இனிமேல் மதுரைக்கே அபூர்வமாகத்தான் வருவார்...’ என்கிறார்.''
''இது என்ன புதுக் கதை?''
''மதுரைத் தி.மு.க-வில் பரவி இருக்கும் சமாசாரத்தைத்தான் சொல்கிறேன். அழகிரியின் சத்யசாய் நகர் வீடு கடந்த ஒரு வாரமாக அமைதியாய் இருக்கிறது. தனது முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் நம்பிக்கைக்குரிய சென்னைப் பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டாராம் அழகிரி. இரண்டு உதவியாளர்கள் மட்டும் காலையும் மாலையும் வந்து சில மணி நேரங்கள் இருந்து, போன் வந்தால் பேசிவிட்டு... கடிதங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்களாம். மற்றபடி இயல்பாய் வரும் மனிதர் கூட்டம் மொத்தமாய் குறைந்துவிட்டதாம். 'அழகிரியை ஆதரித்துப் பேசினால், தங்களை போலீஸ் வளைத்துவிடுமோ?’ எனப் பயந்து, சிலர் தேவை இல்லாமல் அழகிரியைத் திட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறார்களாம்!'' என்று சொல்லிவிட்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக