அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பிலான செயற்திட்ட அறிக்கை ஒன்றினை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தை நீக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தங்களை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாது மனித உரிமை அமைப்புமற்றும் சர்வேதச மன்னிப்புச் சபை என்பனவும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு இலங்கையை வலியுறுத்தி வந்தன.
இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வெளிவந்த காலகட்டத்தில் அவசரகால சட்டத்தை நீக்காத விடத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலைகையை நீக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்தது.
இதனை இலங்கை அரசு பொருட்படுத்தத்தாதை அடுத்து ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஐ.நா சபை நிபுணர் குழு அறிக்கையில் கூட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.
இக்காலகட்டத்தில் இலங்கை அரசு ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை சர்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையென கூறியிருந்தது.
இந்நிலையில் அரசு படிப்படியாக அவசரகால சட்டத்தை விதிமுறைகளை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்தது எனினும் அழுத்தங்கள் அதிகரிக்கவே அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்க அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக