நான்கு மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக இருக்கும் திருகோணமலை மூதூர் பெண்ணான ரிசானா நபீக்- பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்று விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேரா- மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக்- சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்தகது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக