13 வயது ஜன்னத் உறங்கிக் கொண்டிருக்கிறாள். தன் மேலிருந்த போர்வை உருவப்படுவதை உணர்ந்து கண் விழிக்கிறாள். சில நொடிகளில் என்ன நடக்கிறதென்று உணர்வதற்குள்ளேயே, அவளது நெஞ்சும், முகமும் தாங்க முடியாத அளவுக்கு வலியும், எரிச்சலுமடைகிறது. அவளுக்கருகில் உறங்கிக் கொண்டிருந்த அவளது தம்பிக்கும் முதுகில் வலி. ஜன்னல் வழியாக வீசப்பட்ட பாட்டரி ஆசிட் தாக்குதல்தான் இச்சிறுமியின், அவளது தம்பியின் வலிக்கும் எரிச்சலுக்கும் காரணம்.
ஜன்னத் மீது ஆசிட் வீசியவர் அவளது வீட்டுக்கருகில் வசிக்கும் 20 வயது இளைஞர். ஜன்னத்தின் முகத்தை ஆசிட் வீசி சிதைக்கக் காரணம், அவள் அவ்விளைஞரின் திருமண ஆசைக்குச் சம்மதிக்காததுதான். பெண்களின் மீதான ஆசிட் தாக்குதலைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருக்க மட்டுமே செய்திருந்த ஜன்னத்தின் குடும்பத்தினருக்கு அன்றுதான் அதன் உண்மையான வலியும், வேதனையும், சூழ்நிலையின் பதைபதைப்பும் புரிந்தது. சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தலைநகர் டாக்காவிற்கு ஜன்னத்தை உடனடியாக அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தால் ஆசிட் காயத்துடனே காத்திருந்த ஜன்னத் க்கு மறுநாள்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரூபாலிக்கு திருமண வாழ்வைப் பற்றி ஒரு அழகான கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு திருமணமான ஆறு மாதங்களிலேயே ஆட்டம் கண்டது. வரதட்சணையாக ஒரு மோட்டார் பைக்கை வழங்கியிருந்தார் ரூபாலியின் தந்தை. ஆனாலும் இன்னும் பணத்தை வாங்கி வருமாறு அவளது கணவனும், மாமியாரும் வற்புறுத்தினர். ரூபாலியைக் கடுமையாக நடத்தியதோடு, நாள் முழுவதும் ஓய்வில்லாத வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் கட்டாயப்படுத்தினர்.
முடிவில் ரூபாலி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறியபோது, அவரது கணவனும் மாமியாரும் அவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர். அதைத் தொடர்ந்து அடிக்கவும் முற்பட்டனர். திடீரென்று அவள் எதிர்பாராத தருணத்தில், ரூபாலியின் மாமியார் அவரைப் பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள கணவன் அவரது வாயில் ஆசிட்டை ஊற்றினான்.
அக்கம்பக்கத்து வீட்டினர் ரூபாலியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர்களால் முதலுதவி அளிக்க முடியவில்லை. டாக்காவிற்கு அழைத்துச் சென்றாலும் ரூபாலிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ரூபாலியின் பெற்றோரால் மருந்துகளை விலை கொடுத்து வாங்க முடியாததே அதற்குக் காரணம்.
இந்த ஆசிட் வீச்சு ஜன்னத்துக்கோ அல்லது ரூபாலிக்கோ மட்டும் நடந்ததல்ல. பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 300 பெண்கள் ஜன்னத்தைப் போலவும், ரூபாலியைப் போலவும் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
78 சதவீத ஆசிட் வீச்சுகளுக்குக் காரணம் காதலை ஏற்க மறுத்தது மற்றும் திருமணத்துக்கு சம்மதம் அளிக்காதது அல்லது உடலுறவுக்குச் சம்மதிக்காதது போன்றவையே. வரதட்சணை, குடும்பச் சண்டைகள், சொத்துப் பிரச்சினைகள் முதல் சமையல் செய்வதில் ஏற்படும் சிறு தாமதம் கூட இந்த ஆசிட் வீச்சுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றவர்கள் நிலத்தை விற்க வேண்டிவரும் என்பதற்காகவே நிலத் தகராறுகளுக்காகவும் ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.
இந்த ஆசிட் வீச்சுகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கின்றன. அல்லது மிக அவசியமான வேலைகளுக்காகப் பெண்கள் வெளியே செல்லும் சமயங்களில் இந்த ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அருகிலிருப்பவர்களும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படுவதால், சுதாரித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதும் தாமதமாகின்றது.

ஆசிட் எனும் கொடூரமான ஆயுதம் ஏன் எனில் கார் பாட்டரியின் ஆசிட் கிடைப்பது எளிது, அதே சமயத்தில் விலை மலிவான ஆயுதமும் கூட. ஒரு சில நாணயங்களில் ஒரு முழுக் கிண்ணம் அளவுக்கு ஆசிட் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இந்த ஆசிட் வீச்சுகள் எல்லாம், முக்கியமாக முகத்தை நோக்கிக் குறிவைத்து வீசப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் முகம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகிறது. ஒருவரது சொந்த அடையாளத்தையே சிதைப்பது குரூரத்தின் உச்சநிலையாக இருக்கிறது! அவர்களது வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகின்றது. பல்லாண்டு காலம் பெண்கள் முகத்தை மூடியிருந்த ஹிஜாப், பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டு அவர்கள் தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.
மீதி இதன் தொடர்ச்சியை வாசிக்க வினவு இனைய தளத்திற்கு செல்லவும் www.vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக