ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை சீனா செல்லவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனாதிபதி பல ராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளார். குறிப்பாக சீனவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்து சீன உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக