வடக்கு கிழக்கில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் 59, 501 பேர் விதவைகளாகியுள்ளனர்!
யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வடக்கு கிழக்கில் 59 ஆயிரத்து 501 பேர் விதவைகளாக்கப்பட்டிருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று சபையில் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. யுமான சஜித் பிரேமதாஸவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கரலியத்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில்: யுத்தம் மட்டுமல்லாது ஏனைய காரணங்களினாலும் வடக்கில் 16 ஆயித்து 936 பேரும் கிழக்கில் 42 ஆயிரத்து 565 பேரும் விதவைகளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கென அரசாங்கம் பல்வேறு நலன்புரித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பது என்ற சொல்லுக்கு தற்போது அர்த்தம் மிகவும் அற்பமாக ஆகிவிட்டது. ஒரு விதவைக்கு உண்மையான மறுவாழ்வு என்பது அவளை நேசிக்கவும் கூடி வாழவும் விருப்பம் கொண்ட ஒரு நல்ல வாழ்கை துணையிலேயே பெரிதும் தங்கி இருக்கின்றது. இங்கே தான் நாம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.
குறிப்பாக புலன்பெயர் உறவுகளை, ஏனென்றால் நம் மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் பெரிதும் புலன்பெயர்ந்தவர்களே. சதா உசுப்பேத்தி உசுப்பேத்தி நந்தி கடலில் கவிழ்த்து விட்டவர்கள் புலன் பெயர்ந்தவர்களே.ஏராளமான வாலிபர்கள் திருமணமாகாமலும் மணமாகியும் தனியாகவும் வாழும் வாலிபர்கள் ஏன் எம் சகோதரிகளுக்கு வாழ்வு கொடுக்க முன்வரக்கூடாது?
இனப்பற்று என்பது தலை நகரங்களில் பியர் அடித்துவிட்டு பிசாவும் சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக கொடி பிடிப்பது என்று காலத்தை ஒட்டி விட்டீர்கள்.
நீங்கள் செய்த பித்தலாட்டங்களுக்கு ஒரு பிராயசித்தமாகவேனும் இந்த விடயத்தை பற்றி சிந்தியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக