ராமேஸ்வரத்தில் நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்திற்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
பல மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். தியேட்டர்களுக்கான உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; தியேட்டர்களில் படம் ஓடாத காலங்களில், அதை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் அண்ணாமலை கூறியது: திரைப்பட தயாரிப்பு செலவினை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு கோடிக்கு மேல் சம்பளம் பெறும் நடிகர்கள், டெக்னீசியன்களின் சம்பளம், திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் வழங்க சம்பந்தப்பட்ட சங்கங்களை கலந்து பேசி முடிவு எடுக்க முயற்சித்து வருகிறோம். தமிழ்ப் படங்களுக்கான வரிவிலக்கை, படம் ரிலீசாகும் போதே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிவிலக்கு ஆலோசனை ஐவர் குழுவில், தியேட்டர் உரிமையாளர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக