இலங்கைக்கு தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில், சீன அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென சீன பிரதமர் வென் ஜியபாஒ தெரிவித்துள்ளார். உத்திய பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(ஆகஸ்ட்-11) பீஜிங்கில் பிரதமர் இல்லத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்தையில் கலந்துக்கொண்டபோதே சீன பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றியமைக்கு இலங்கை அரசை பாராட்டியதுடன், துறைமுகத்தின் இரண்டாம் கட்ட நிர்மானபணிகளுக்கு சீன அரசாங்கம் நிதியுதவியளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் இடம்பெற்றுவரும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீன அரசு வழங்கும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்ததுடன், முன்பு இலங்கையில் நிலவியிருந்த குழப்ப சூழ்நிலை குறித்து விளக்கியதுடன், தற்போது அரசாங்கம் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த மேற்கொள்ளும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விளக்கமளித்தார்.
மேலும் இரு தரப்பு தலைவர்களும், சீனாவின் உதவியுடன் நிர்மானிக்கப்பட்டுவரும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் மற்றும் இரு நாட்டின் தலைநகரங்களுக்கிடையே விமானச்சேவையை அதிகரித்தல் குறித்தும் இங்கு கலந்துரையாடினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக