கோப்பாயில் இராச வீதியிலுள்ள காணி ஒன்றில் பனைமரத்தில் தூக்கில் தொங்கிய அருளன் தனபாலசிங்கம் (வயது 43) மற்றும் இந்துஷா (வயது 24) ஆகிய இருவரின் மரணம் தொடர்பாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தமையை அடுத்து பொலிஸாரின் விசாரணைக்காக சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பின்னரே சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன என்று சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று இந்த இருசடலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை யாழ். நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக