ஜெயலலிதா கொடநாட்டில் இருக்கிறார். அவர் திரும்பி வந்ததும் சந்திக்கணும்னு டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ரொம்ப ஆர்வமா இருக்காருன்னு சினிமா வட்டாரத்திலிருந்து தகவல் வந்ததால, என்ன விவரம்னு விசாரித்தேன். அவரோட மகன் விஜய் நடித்த வேட்டைக்காரன், சுறா படங் கள் விஷயத்தில் சன் டி.வி. மீது அப்பா-மகன் இரண்டு பேருமே கடும் அதிருப்தியில் இருக்காங்களாம். அதோடு, ஆளுங் கட்சித் தரப்பிலிருந்து அடிக்கடி ஃபங்ஷ னுக்கு விஜய்யை வரச்சொல்லி நெருக் கடி கொடுக்குறாங் களாம். இந்த நெருக் கடிகளால், தி.மு.க. அனுதாபியான எஸ்.ஏ.சந்திரசேகர், போயஸ் கார்டனின் ஆதரவை எதிர்பார்க் கிறாராம்.''
""ஏற்கனவே விஜய் டெல்லிக்குப் போய் ராகுலைப் பார்த்துட்டு வந்தாரே?''
""தமிழ்நாட்டில் காங் கிரசை வளர்க்கணும்ங்கிறதுக் காக சினிமா நட்சத்திரங் களுக்கு ராகுல் வலை விரித்துப் பார்த்தார். அதன் விளைவுதான் ராகுல்-விஜய் சந்திப்பு. ஆனா, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அன்ஃபிட்னு விஜய் நினைப்ப தால் அங்கே போகலை. ஆனா, ராகுலை சந்தித்துவிட்டு வந்ததி லிருந்து தி.மு.க. தரப்பிலிருந்து, நீங்க அங்கே போய் சேரக் கூடாதுன்னு நிறைய நெருக்கடி வந்ததா விஜய் தரப்பு சொல்லுது. அதனாலதான் அவங் கப்பா போயஸ் கார்டனுக்குப் போகலாம்ங்கிற எண்ணத்தில் இருக்காராம்.''
""2006 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கடைசி நேரத்தில் சரத்குமாரை கட்சியில் சேர்த்துக்கிட்டார் ஜெ. அது போல, எத்தனை கோடி கொடுத்தாவது கமல்ஹாசனை அ.தி.மு.க.வுக்கு ஆதரவா பிரச் சாரம் செய்ய வைக்கணும்னு முயற்சி செய்தார். கமல் கடைசிவரைக்கும் பிடிகொடுக்கலை. இந்த முறை விஜய் தரப்பு அ.தி.மு.க.வை தானா தேடி வந்தா அது லாபம்தானே!''
""விஜய் நற்பணி இயக்கத்தில் உள்ள ரசிகர்களெல்லாம் இந்தத் தேர்தலில் விஜய் களமிறங்குவார்ங்கிற எதிர்பார்ப்பில் இருக்காங்களாம். ஆனா, விஜய்யைப் பொறுத்தவரை தேர்தலில் நேரடியா இறங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அதேநேரத்தில், ரசிகர்கள் சோர் வடைந்திடக்கூடாதுன்னு விஜய் அப்பா நினைக்கிறார். அதனால, ஜெ.வை சந்தித்து, தேர்தலில் அ.தி. மு.க.வை விஜய் நற்பணி இயக்கம் ஆதரிக்கும். எங்களுக்கு 30 சீட் கொடுங்கன்னு கேட்கப் போறாராம். அ.தி.மு.க. தரப்பிலிருந்து தே.மு. தி.க.வோடு நடத்தப்படும் பேச்சு வார்த்தைகள் இன்னும் முடிவுக்கு வரலை. விஜயகாந்த் தரப்பு கேட்கும் சீட்டைவிட நோட்டு ரொம்ப அதிகமா இருப்பதால, விஜயகாந்த்துக்குப் பதில் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்ங்கிற ஆலோசனை அ.தி.மு.க தரப்பிலும் ஓடிக்கிட்டி ருக்காம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக