minnambalam.com - Mathi : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருந்த நிலையில், கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற் கொலை ( ? ) செய்துகொண்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சி.ஜே. ராய், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு, விளையாட்டு, விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் எனப் பல்வேறு துறைகளில் கால் பதித்த கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்தார்.
பெங்களூருவில் உள்ள சி.ஜே.ராய் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமது அறைக்குள் சென்று லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் சி.ஜே.ராய். அவரது இந்த திடீர் முடிவு, வருமான வரித்துறையினரையும், அங்கிருந்தவர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் கடுமையான நெருக்கடியால் சி.ஜே. ராய் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக